எக்காரணம் கொண்டும்.. இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க.. தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில், மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், அத்தகைய மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி. (RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் பகிர்மான விதித் தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன் விவரங்கள்:

1.வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளிலும், தற்காலிக மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி. (RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

eb

2. அதே போல 10 கிலோ வாட்டிற்கு மேல் சாதனங்களை பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி. (RCD) சாதனத்தை பொருத்த வேண்டும்.

3. தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி. சாதனத்தை பொருத்த வேண்டும். அத்தகைய அமைப்பினால், அந்தந்த கட்டிடப்பகுதியில் உள்ள மனிதர்கள், அந்தந்தப்பகுதியில் உண்டாகும் மின்பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள்.

4. புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில் நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை பொருத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல், மின்னிணைப்பு வழங்கப்படமாட்டாது.

5. மின்விபத்துக்கள் மற்றும் தடுக்க வேண்டுமென்பது இவ்வாணையத்தின் நோக்கமாகும். இந்த சட்டப்பூர்வமான வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆர்சிடி என்றால் என்ன? ஏன் பொருத்த வேண்டும்?: எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்சிடி) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது ஆகும். RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறேதே என்று சொல்ல வேண்டாம்.

இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம்

ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+