ஒவ்வொருத்தருக்கும் 10000..செல்போன் வாங்க அள்ளி தரும் தமிழக அரசு! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் மற்றும் சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசு துறை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு செல்போன் அல்லது டேப்லெட் வாங்க பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மிக முக்கிய பல்வேறு சேவைகளை தமிழக அரசே நேரடியாக வழங்கி வருகிறது. அந்த வகையில் மருத்துவம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் ஆகியவை தமிழக அரசு மூலமும் மத்திய அரசின் நிதி பங்களிப்பு மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட சேவைகள் தனியார் மூலம் வழங்கப்பட்டாலும் மின்சாரம் அரசு மூலமே வழங்கப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கானோர் அரசு மின் சேவையை நேரடியாக பெற்று வருகின்றனர். சிலர் காற்றாலை மற்றும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து அதனை அரசுக்கு வழங்கி பிறகு தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு பெற்றுக் கொள்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் மின் கணக்கீடு இரு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. அதில் வீடு வீடாகச்செல்லும் மின்சாரத்துறை ஊழியர்கள் நேரடியாக கணக்கீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்து தெரிவிக்கின்றனர். மேலும் இமெயில், எஸ்எம்எஸ் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டண விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. தற்போது மின் கணக்கீட்டுக்கு என தனி அப்ளிகேஷன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊழியர்கள் அவரவர் செல்போனில் அதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்களுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் வழங்கப்பட்டிருக்கிறது. செல்போனின் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தால் மின் பயன்பாட்டு விபரங்கள் அந்த அப்ளிகேஷனில் அப்டேட் செய்யப்படும். தொடர்ந்து மின்வாரிய சர்வர் மூலம் கட்டண விவரங்கள் வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும். சோதனை அடிப்படையில் செய்யப்பட்ட இந்த பணி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் தனிப்பட்ட செல்போன்களை வேலைக்கு பயன்படுத்துவதால் தரவு திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே இதற்கான தனியாக மொபைல் வாங்கி தர வேண்டும் அல்லது டேப்லெட் வழங்க வேண்டும் என மின்சாரத் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த மின்வாரியம் மின் கணக்கீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் வாங்க பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
ஒரு செல்போனை வாங்கி அதன் பில்லை கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், தற்போதைய சூழ்நிலையில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போட்டால் தான் நல்ல செல்போனையோ அல்லது டேப்லெட்டுகளையும் வாங்க முடியும். பத்தாயிரம் ரூபாய் என்பது தரம் குறைந்த மொபைல்களை மட்டுமே வாங்க பயன்படுத்தப்படும் தொகை என்பதால் டேப்லெட் அல்லது செல்போனை மின் வாரியமே வாங்கி தர வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒரு செல்போனுக்கு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்ற உச்சவரம்பு தவறானது எனவும் தரமான தொலைபேசிகளை டேப்லெட்டுகளை வாங்கினால் தான் அதிக நாட்கள் பயன்படுத்த முடியும். எனவே தரமான செல்போன்களை அரசே கொள்முதல் செய்து மின் கணக்கீடு செய்யும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் அல்லது அவர்கள் வாங்கும் செல்போனுக்கான முழு பில் தொகையை தர வேண்டும் என்கின்றனர். மேலும் புதிய அப்ளிகேஷனை பயன்படுத்த செலவாகும் இன்டர்நெட் பில்லையும் மின்வாரியமே செலுத்த வேண்டும் எனவும் மின் கணக்கீட்டு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications