இதெல்லாம் வேற லெவல் யோசனை.. மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வித்துறை சிறப்பான உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முக்கியமான உத்தரவு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை எல்லாம் முடிந்து பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலாண்டு தேர்வுகளுக்கான பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் காலாண்டு தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பள்ளிகள் தொடக்க நாட்களில் 2 வாரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.

அதன்பின் பள்ளிகள் தொடங்கியும் கூட மழை காரணமாக முதல் சில நாட்கள் பள்ளிகள் நடத்தப்படுவதில்லை சிக்கல் இருந்தது. அதை ஈடு கட்ட தற்போது சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க சனிக்கிழமைகளில் அடிக்கடி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலாண்டிற்கு முன் அதற்கான பாடத்திட்டங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முக்கியமான உத்தரவு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு சிலர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் இது தெரிய வந்துள்ளது. இளம் வயதிலேயே சிலருக்கு நீரழிவு நோய்கள் ஏற்பட்டு உள்ளன.
இப்போதெல்லாம் நீரழிவு நோய்கள் என்பது பெற்றோரிடம் இருந்து நேரடியாக குழந்தைகளுக்கும் வருகிறது. ஜீன் ரீதியாக பலருக்கு நீரழிவு நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோல்தான் இவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் நீரழிவு நோய்கள் உள்ள மாணவ, மாணவியர், அதற்கு ஏற்ப வகுப்புகளில் உணவு உட்கொள்ள, மருந்து எடுக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் முன்கூட்டியே நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும் என்றால் அதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடக்கும் நாட்களிலும் இதேபோல் தேர்வு அறைக்கு உணவு எடுத்து செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மருந்துகள், பழங்கள், தண்ணீர் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு நேரங்களில் அவர்கள் மயக்கம் அடைய கூடாது,. ரத்த சர்க்கரை அளவு மாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக சிறிய அளவிலான ரத்த சர்க்கரை அளவு சோதனை மானிகளை கொண்டு வர மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
மாணவர்கள் இடையே இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது போக கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு முறையாக சென்று சேர வேண்டும்.
அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் முறையாக பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். இதை கண்காணிக்க மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேர்ந்து உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
எல்லா மாணவர்களுக்கும் எல்லா திட்டங்களும் சரியாக சென்றுள்ளதா என்பதை கண்காணிப்பதே இவர்களின் பணி என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications