Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால், இக்கட்சியுடன் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் திமுக 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்திருப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருக்கிறார்.

சற்று முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிபிஎம் பேச்சுவார்த்தைக் குழு பேசியிருந்தது. இதனையடுத்து என்ன பேசப்பட்டது என்பது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

Tamil Nadu Election 2026

சிபிஎம் மாநிலகுழு எடுத்த முடிவு

அவர் பேசியதாவது, "இரட்டை இலக்கத்தில் தொகுதியை வலியுறுத்தினோம். நேற்று எங்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநில குழு கூடி, இந்த விவகாரம் குறித்து விவாதித்திருந்தது. இதில் எங்கள் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி இதில் பங்கேற்றிருந்தார். கட்சியின் மாநில செயற்குழு 2 முறை கூடி, 6 தொகுதிகளுக்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்று கூறியது. 6 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

மாநிலகுழு அளித்த அதிகாரம்

எங்களுக்கு மாநிலகுழு அளித்த அதிகாரம் 6-ஐ கேட்டு பெறுவதுதான். ஆனால், கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்திருப்பதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது சிரமம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை முதலமைச்சர் நேரடியாக அழைத்து பேசவில்லை. ஆனால் இப்போது நேரில் பேசியிருக்கிறார்.

முதலமைச்சர் சொன்னது என்ன?

முதலமைச்சரை சந்தித்து பேசுகையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இருக்கும் சிக்கலை அவர் கூறியிருந்தார். 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தார். மாநில குழு கூட்டத்தில் பேசிவிட்டு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். எனவே கட்சியின் மாநில செயற்குழுவில் விவாதித்து உரிய முடிவுகளை அறிவிப்போம். முதலமைச்சரின் அறிவிப்பை ஏற்பதா என்பதை முடிவெடுத்து அறிவிப்போம்.

குறைவான சீட் கொடுத்தாலும், நாங்கள் எதிர்பார்த்த சீட் கிடைத்தாலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் நாங்கள் தொடர்வோம்" என்று பேசியிருக்கிறார்.

சிபிஎம் வைத்த டிமாண்ட்

கடந்த தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் இதில் 2 தொகுதிகளில்தான் கட்சி வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், "நாங்கள் வலுவாக இருந்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதுவும் தோல்விக்கு காரணம்தான். கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். கொடுக்கவில்லை" என்று சண்முகம் கூறியிருந்தார்.

சென்னையில் போட்டி

அதேபோல, சென்னையில் ஏதேனும் தொகுதிகளை கேட்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சண்முகம், "சென்னையும் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது? முதலில் தொகுதிகளின் எண்ணிக்கைய முடிவு செய்வோம். பின்னர் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வோம். இருப்பினும் சென்னையில் போட்டியிட நாங்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் எந்த தொகுதி?

அதாவது 5 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவாகிவிட்டால், அந்த 5 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி சென்னைக்குள் இருக்க வேண்டும் என்று சிபிஎம் டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் பெரம்பூர், வில்லிவாக்கம், ஸ்ரீபெரம்புதூர் ஆகிய தொகுதிகளில் சிபிஎம் ஜெயித்திருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வேளச்சேரி, பெரம்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதியில் போட்டியிட சிபிஎம் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+