விடிந்தால் ரிசல்ட்... குடும்பத்தோடு கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மு.க ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ள நிலையில் ரிசல்ட் வருவதற்கு முன்னதாக கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியுள்ளார் மு.க ஸ்டாலின்.

Recommended Video

    நேற்று இரவு திடீரென கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

    தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் இருந்தே வேட்பாளர்களும் முகவர்களும் தூக்கத்தை தொலைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. மே 2ஆம் தேதி ஞாயிறு காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

    10 ஆண்டுகள் காத்திருப்பு

    10 ஆண்டுகள் காத்திருப்பு

    அதிமுக கடந்த 2011ஆம் ஆண்டு முதலே ஆளுங்கட்சியாக உள்ளது. 2011ஆம் ஆண்டு படு மோசமான தோல்வியை சந்தித்தது திமுக, எதிர்கட்சி வரிசையில் கூட அமரவில்லை. 2016 ஆம் ஆண்டு வலுவான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது திமுக. எதிர்கட்சி தலைவரானார் மு.க ஸ்டாலின். இந்த சட்டசபைத் தேர்தலில் எப்படியும் ஆளுங்கட்சியாக அரியணையில் அமரவேண்டும் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

    திமுகவிற்கு சாதகம்

    திமுகவிற்கு சாதகம்

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் திமுகவிற்கு சாதகமாகவே உள்ளது. பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி திமுக ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    திமுகவினர் உற்சாகம்

    திமுகவினர் உற்சாகம்

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே அடுத்தது நம்முடைய ஆட்சிதான் என்று தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார் மு.க ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த உடன் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று கூறி வரும் ஸ்டாலினை கருத்துக்கணிப்புகள் உற்சாகமடையச் செய்துள்ளது.

    ஸ்டாலின் மரியாதை

    ஸ்டாலின் மரியாதை

    வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் மு.க ஸ்டாலின். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார் ஸ்டாலின்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+