நொடிக்குநொடி சரவெடி.. மின்சார வாரியம் அதிரடி.. தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள்
சென்னை: தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக மின்வாரியம் செயல்படுத்துகிறது... இதற்காகவே மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், சிம் கார்டு வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருக்கிறது..

உயரத்த பிரிவு: தற்சமயம், உயரழுத்த பிரிவில் இடம்பெறும், 11,000 தொழிற்சாலைகளில் மட்டும், ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மீட்டரில் மாதம்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்பட்டிருக்கிறது.. எனவே, குறிப்பிட்ட தேதி வந்ததும், தானாக கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணம் அனுப்பப்படுகிறது.
தாழ்வழுத்த பிரிவு: இதேபோல், தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாகவும, முதற்கட்டமாக, சென்னை தி.நகரில், 1.42 லட்சம் வீடுகள் உள்ளிட்ட இணைப்புகளில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது, தாழ்வழுத்த தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களில் செல்போன் ஆப்பில் கணக்கு எடுக்கப்படும் நிலையில், இதற்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாம்.. மொத்தமுள்ள 60 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில், முதற்கட்டமாக 25 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், அந்த மீட்டரில் சிம்கார்டு பொருத்தி அலுவலக சர்வருடன் இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
புதிய சாப்ட்வேர்: இதற்காக, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications