கரண்ட் பில்லில் வருது மாற்றம்.. மின் மீட்டருக்கு தனி நம்பர்.. தமிழக மின்வாரியம் புது கடிவாளம்.. சபாஷ்
சென்னை: மின்வாரியம் தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் புது அதிரடியை தற்போது எடுக்கப்போகிறது.
வீடுகளில் மின் கணக்கீடுகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் கிளம்பின.. அதனால்தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கான டெண்டரையும் அரசு கோரியுள்ளது..

மின்வாரியம்: அதேபோல, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது..
அதாவது, தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழில் மற்றும் வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில், புது செல்போன் செயலியை, தமிழக மின்வாரியம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆக ஒரு பக்கம், ஸ்மார்ட் மீட்டர் மற்றொருபக்கம் புது செல்போன் செயலி என பொதுமக்களுக்கான வசதிகளை செய்து வரும்நிலையில், இன்னொரு அதிரடியும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர்கள்: அதாவது, தற்போது, மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் உதவியுடன்தான் மின் வினியோகம் நடந்து வருகிறது.. ஆனால், இந்த சாதனங்களை எல்லாம் தனியார் நிறுவனங்களிடம் இருந்துதான் வாங்கப்படுகின்றன. இதில் சில நிறுவனங்கள், தரமற்ற சாதனங்களை வினியோகம் செய்வதாக தெரிகிறது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவே, மின்வாரியம் கடிவாளம் ஒன்றை போட்டுள்ளது.
அந்தவகையில், இனிமேல், மீட்டர்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இப்படி ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு பிரத்யே நம்பர்கள் தரப்போகிறார்களாம். அந்தந்த மீட்டரில், கியூ ஆர் கோடு, ஸ்கேன் குறியீடு, வரிசை எண்கள், ஆங்கில எழுத்துக்கள் என அத்தனை அடையாளமும் இடம்பெற்றிருக்குமாம். குறிப்பாக, டிரான்ஸ்பார்மரில், 15 நம்பருடன் கூடிய எழுத்துக்கள், கரண்ட் கம்பங்களுக்கு 13 நம்பருடன் கூடிய எழுத்துக்கள் இடம்பெற போகிறதாம்.
முறைகேடுகள் : இந்த எண்களை வைத்துதான், எந்த நிறுவனத்திடம் வாங்கப்பட்டது? எங்கு அனுப்பப்பட்டது? எங்கு பொருத்தப்பட்டது? என எல்லாவற்றையும் துல்லியமாக அறிய முடியும். சுருக்கமாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட ஆதார் கார்டு போலவே, மின் மீட்டர் உள்ளிட்டவைகளுக்கும் பிரத்யேகமான "எண்கள்" தப்பட்டுள்ளதால், தரமற்ற சாதனங்கள் வாங்குவது இனி தடுக்கப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications