புதிய மின் இணைப்பு, கட்டணம் குறைப்பு .. டபுள் ஹேப்பி நியூஸ்.. தமிழ்நாடு மின்சார வாரியம் அசத்தல்
சென்னை: புதிதாக மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு 3 முதல் 7 நாட்களில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வது மாநில அரசு தான். தமிழக அரசு தார்ன பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை உருவாக்கி ஏழைகள் பயன்படும் வகையில் மின் இணைப்பு வழங்குவதல் மற்றும் சலுகைககளை செயல்படுத்தி வருகிறது.

புதிதாக மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து மின் இணைப்பு வழங்கப்படுகிறது. முன்பு மின் இணைப்பு வேண்டும் என்றால் நேரில் செல்ல வேண்டும். ஆனால் இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும்.
கடந்த ஆண்டு வரை பொதுவாக புதிய மின் இணைப்பு பெற 30 நாட்கள் வரை ஆகும்.. ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு வாங்கும் நபர்களுக்கு விரைவிலேயே மின் இணைப்பு வழங்க கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 7 நாட்களுக்குள் இணைப்பை வழங்கியாக வேண்டும். அப்படி வழங்க முடியாவிட்டால், 10 நாட்களுக்கு பின்பான நாட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
அந்த பரிந்துரைகளின் படி, "புதிய இணைப்புக்கான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என தாமதம் செய்யக்கூடாது, தகவல்கள் சரியாக நிரப்பப்படவில்லை என்றால் அடுத்த 3 நாட்களுக்குள், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும். நுகர்வோர்களுக்கு விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும், ஒருவேளை மின் இணைப்பு வழங்க தாமதமாகும் என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் விதம் நுகர்வோருக்கு மின்வாரியம் அபராதம் செலுத்த வேண்டும்" என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வைக்க வேண்டும் அல்லது புதிதாக மின் கட்டமைப்புகளை வேறு இடத்தில் இருந்து போஸ்ட் மரம் மூலம் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது என்றால் மட்டும் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை. மேற்கண்ட இரண்டு காரணங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக மின்இணைப்பு கோரி நுகர்வோர் விண்ணப்பிக்கும் இடத்தில் மின்மாற்றிகள் இல்லையென்றால் 90 நாட்களும், மின்கம்பங்கள் இல்லையென்றால் 60 நாட்களுக்குப் பிறகு மின்இணைப்பு வழங்வது நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், மின்மாற்றி, பில்லர் பாக்ஸ், மின்கம்பம் ஆகியவை உள்ள இடங்களில் மின்இணைப்பு கோரி விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மின்இணைப்பு வழங்க அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
மின் இணைப்பு கட்டணம்: முன்னதாக மின்கம்பிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் புதிய மின் இணைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து புதிய மின்சார இணைப்புகளுக்கான மேம்பாட்டுக் கட்டண உயர்வினை மாற்றி அமைத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டது.
அதாவது, 75 சதவீதத்துக்கும் அதிகமான பூமிக்கடியில் கேபிள்களைக் கொண்ட மின்சார வினியோக நெட்வொர்க்குகளில், அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்றும், அதேநேரம் பூமிக்கடி நெட்வொர்க் 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள பகுதிகளில், குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் உயர்த்தப்பட்ட மின்கம்பிகள் மூலம் மும்முனை இணைப்பு மூலம் வினியோகம் செய்ய மேம்பாட்டுக் கட்டணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஒருமுனை இணைப்புக்கு ரூ.2 ஆயிரத்து 800-ம் வசூலிக்கிறது. அதேநேரம் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் வினியோகம் செய்யப்பட்டால், ஒருமுனை இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் மும்முனை இணைப்புக்கு ரூ.5 ஆயிரமும் மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications