ஹையோ.. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு.. நேற்று ஒரே நாளில் செலவிடப்பட்ட 17,370 மெகாவாட் மின்சாரம்
சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இதற்கு முன்பு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தலைதூக்கியுள்ள மின் வெட்டு பிரச்சனையால், பொதுமக்கள் மிகவும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இரவு நேரங்களில் தூங்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மின் தடை
இது குறித்துப் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " இது தொடர்பாக பேசிய செந்தில் பாலாஜி," மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த வழங்கப்படவில்லை.இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டது. கடந்தகால அதிமுக ஆட்சியின் போதும் இதுபோன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றுள்ளது. என்றார்.

சீரான மின் விநியோகம்
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் மாலை முதல் மின் வினியோகம் சீரானது. நண்பகல் நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்ட நிலையில் மாலை 5 மணி முதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்படவில்லை. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படவில்லை

திராவிடியன் மாடல் நல்லாட்சி
மேலும், " திராவிடியன் மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலால் மட்டுமே, 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 2200 கோடி ரூபாய் அளவுக்கு செலவினங்களைக் குறைத்து, சேமிப்பை உருவாக்கியுள்ளது வாரியம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன், விழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிர்வாக திறனால் மட்டுமே, 2020-21ல் ரூ 15,157 கோடியாக இருந்த நஷ்டம், இந்த வருடம் ரூ 12,991 கோடியாக குறைந்திருக்கிறது என கூறியிருந்தார்.

அதிகபட்ச மின் நுகர்வு
இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி," நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
