பின்னியெடுக்குறாங்களே சுப்ரியா சாஹூ.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு.. அசத்தும் க்ரீன் தமிழ்நாடு மிஷன்
சென்னை: மாநில அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத் திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் 10 வருடங்களுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.. வெறும் மரக்கன்றுகளை மட்டுமே நட்டுவைக்காமல், அவைகளை வளர்த்தெடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன்: இந்த கிரீன் தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission) திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகர்புறங்களில் உள்ள வெப்பத்தின் தாக்கம் குறையும்.. பல்லுயிர் பெருக்கம் நிறைய நிகழும்.. ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.. காற்றில் உள்ள மாசு கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இதற்காகவே, www.greentnmission.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது. விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மரக்கன்றுகள்: அதாவது, விவசாயிகள் மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை, இந்த வெப்சைட் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.. அல்லது இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8வது தளம், சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்கிற முகவரிக்கு கடிதம் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் பல்வேறு அறிவிப்புகள் இது தொடர்பாக வெளியிடப்பட்டன.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்தில், பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதற்கான ஒரு அறிவிப்பை மாநில அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், "பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டம், மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனி அந்த திட்டத்தில் பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்த வைப்பதே எங்களின் நோக்கமாக உள்ளது.. இதற்காக வன நர்சரிகளை (Forest nurseries) அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
Its our mission to involve school students in the Green Tamil Nadu Mission. To begin with, DFOs have been asked to link our forest nurseries with nearby schools. This would ensure students get a chance to visit Nurseries and learn about various plant species.They can also… pic.twitter.com/CdqxeNxWED
— Supriya Sahu IAS (@supriyasahuias) July 13, 2023
வரவேற்பு: இது பள்ளி மாணவர்கள், அனைவரும் நர்சரிகளுக்கு நேரிலேயே சென்று, அங்குள்ள பலவகை தாவர இனங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.. மேலும், விதைப்பைகளை தயாரிக்கவும், மரக்கன்றுகளை நட்டுவைக்கவும், சிறப்பான சூழலை இது ஏற்படுத்தி தரும். இதுபோன்ற செயல்பாடுகள் இளைய சமுதாயத்தை, பசுமையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல ஊக்கப்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications