‛‛திமுகவை தொட முடியாது’’.. ஆனா அதிமுகவை விட பாஜகவுக்கு அதிக இடம் கிடைக்கலாம் - தந்தி டிவி ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது பற்றிய விபரம் தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் அதிமுகவை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Lok Sabha election 2024 tamil nadu dmk aiadmk bjp 2024


முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தென்சென்னையில் பெரிய ட்விஸ்ட்! தமிழச்சி VS ஜெயவர்தன் VS தமிழிசை.. வெல்வது யாரு? தந்தி டிவி ரிசல்ட்


இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்று தனித்தனியாக கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் கைகள் தான் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஷாக்.. நூலிழையில் மாறும் வெற்றி.. தந்தி டிவி எக்ஸிட் போல்


அதன்படி தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+