பயிர்க்கடன் தள்ளுபடி! விஜய் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிப்பதாக கூறிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வரும் ஜூன் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதாவது பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டனர். மேலும் தவெகவின் தேர்தல் வாக்குறுதியிலும் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு வெறும் ரூ 50ஆயிரத்தை மட்டும் தள்ளுபடி செய்வதா என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் ரூ 75 ஆயிரத்திற்கு மேல் பயிர்க்கடன் வெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ 35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் 25.05.2026 தேதியில் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விலவச கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்தரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை - உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.கடன் தொகை ரூபாயில்குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி (ரூபாயில்)75,000 வரைகடன் தொகை முழுவதும் (100%)75,000 க்கு மேல்35,000இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000/-மும் குறைந்தபட்சமாக ரூ.35,000/-மும் பணப்பயன் கிடைக்கும்.இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி
5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி
93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி
ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்த அறிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே ஜூன் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
ஆன்லைன் லிஸ்ட்டில் கரும்பு அவுட்.. சிவகங்கை கூட்டுறவு வங்கி பயிர்க்கடனில் விவசாயிகள் ஷாக்! என்னாச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications