"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு ரூபாய்க் கடனுக்கு வட்டி செலுத்தவே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டந்த 5 ஆண்டுகளில் மட்டும் வட்டி செலவு 61%ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிதி நிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய தினம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து விளக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக மாநிலத்தில் கடன்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், "வட்டி, சம்பளம், ஓய்வூதியதற்காக மட்டும் மாநிலத்தின் 64% நிதி செல்கிறது. அனைவரையும் கவலைக்குள்ளாக்கும் வகையில் நிதி அசாதாரண நிலை இருக்கிறது. நமது ஆண்டு வட்டி செலவு ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் மொத்த மூலதன செலவை விட வட்டி செலவு. அதாவது எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய மூலதனத்தை விடக் கடனுக்கு வட்டியாக அதிக தொகையைச் செலுத்துகிறோம்.
2017-2018 நிதியாண்டில் இந்த நிலை உருவானது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி அதிகரித்தே வருகிறது. தற்போது மொத்த செலவில் வட்டி என்பது மட்டும் 22%ஆக இருக்கிறது. இது கர்நாடகாவில் 16%, குஜராத்தில் 12%, மகாராஷ்டிராவில் 10%ஆக உள்ளது.
தமிழகத்தில் சொந்த வரி வருவாயில் 34.8% வட்டி செலவுக்கே செல்கிறது. அதாவது மாநிலத்தின் சொந்த வரி வசூலில் ஒவ்வொரு 3 ரூபாயில் ஒரு ரூபாய் எந்தவொரு நலத்திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுவதற்கு முன்பே, பழைய கடன்களில் வட்டி செலுத்துவதில் கரைந்துவிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வட்டி செலவு 61%ஆக அதிகரித்துள்ளது.
உதாரணத்திற்கு ஒரு குடும்பம் மாதம்தோறும் செலுத்தும் கடன் வட்டி, குழந்தைகளுக்கு மாதம்தோறும் செலுத்தும் தொகையை விட அதிகரித்துவிட்டது. வீட்டிற்கான பட்ஜெட்டை மிஞ்சிவிட்டது என்றால் எப்படி இருக்குமோ அந்தவொரு சூழல் தான் உருவாகியுள்ளது" என்றார்.
-
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications