சூப்பர்.. 100% வரிச்சலுகை.. பேட்டரி வாகனங்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு.. குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 20223 ஜனவரி 1ம் தேதி முதல் 2025 31ம் ஆண்டு வரை 100 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு குட்நியூஸ் கூறி உள்ளது.
இந்தியாவில் பேட்டரி வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மாற்று வழி வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
மேலும் நாட்டில் பேட்டரி வாகனங்களை வாங்குபவர்களுக்கு வரிச்சலுகையையும் மத்திய அரசு வழங்கியது. அதன்படி தற்போது நாட்டில் பேட்டரி வாகனங்கள் வாங்குவோருக்கு 50 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

பேட்டரி வாகன விற்பனை அதிகரிப்பு
இதேபோல் ஒவ்வொரு மாநிலங்களும் பேட்டரி வாகன பயன்பாட்டை அதிகரிக்க மக்களை ஊக்குவித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் மின்சார வாகன கொள்கை 2019 வகுக்கப்பட்டது. இதன்மூலம் பேட்டரி வாகன பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பலரும் பேட்டரி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பேட்டரி வாகனங்களின் விற்பனையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் ஆர்வம் அதிகரிப்பு
மேலும் தமிழ்நாட்டில் பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜ் மையங்கள் அமைக்கும் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவும் பேட்டரி வாகனங்கள் வாங்க பொதுமக்களை ஊக்குவிக்குகிறது. கடந்த 2022ல் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் மொத்தம் 7,40,317 பேட்டரி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 51,899 பேட்டரி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. தமிழகத்தில் கடந்த 2018ல் வெறும் 1,332 மின்சார வாகனங்கள் மட்டுமே ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

100 சதவீத வரிச்சலுகை
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரிசலுகையை வழங்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையரகம் சார்பில் அரசிடம் கேட்கப்பட்டது. இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பேட்டரி வாகனங்கள் வாங்கும் மக்களுக்கு 100 சதவீத வரிச்சலுகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசாணை பிறப்பிப்பு
இதுதொடர்பாக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் சார்பில் பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரிச்சலுகை கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை 3 ஆண்டுகள் வரை பேட்டரி வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications