10,000 டூ 20,000..அள்ளித் தரும் தமிழக அரசு!‘இதை’ செய்தால் மட்டும் போதும்! வெளியான சூப்பரான அறிவிப்பு!
சென்னை: மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, 50 சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்காக கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மொத்தம் 8 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை (மரபுவழி / நவீனபாணி பிரிவில்) தொடர்ந்து நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வருகிறது.

அவ்வகையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய- சிற்பக் கலைக்காட்சி நடத்தி, ஓவியக்கலை பிரிவில் (மரபு வழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/-வீதமும், 35 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-வீதமும், சிற்பக்கலை பிரிவில் (மரபுவழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/-வீதமும். 35 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-வீதமும் என 50 கலைஞர்களுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
2024-2025 ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை நடத்திட ஏதுவாக, முதற்கட்டமாக தமிழ்நாட்டினை சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*ஓவிய, சிற்பக் கலைக்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி. கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், படைப்பின் தலைப்பு, படைப்பின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்) ஓவியங்கள்/ சிற்பங்களின் (10 x 12 Size) இரண்டு புகைப்படங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
*கலைஞர்கள் மரபுவழிப் பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.
*1.1.2024-க்கு பின்னர் கலைப்படைப்பு (ஓவியம் / சிற்பம்) உருவாக்க / படைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
*கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.
* தமிழ்நாட்டினை சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் மட்டும் இதில் பங்குபெறுதல் வேண்டும். ஆதார் அடையாள அட்டை நகல் இணைத்தல் வேண்டும்.
*ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடமிருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து, கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம் சிறந்த புகைப்படங்கள் மாநில அளவிலான ஓவிய-சிற்ப கலைக்காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் உரிய விவரங்கள் இவ்வலுவலகத்தினால் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அசல் ஓவியப் படைப்புகளும், சிற்பங்களும் பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும். கலைக்காட்சிக்கு வைக்கப்படும் அசல் ஓவிய, சிற்ப படைப்புகளில் சிறந்த 50 கலைப்படைப்புகள் தெரிவுக்குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்படும்.
மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன் ஓவியங்களின் / சிற்பங்களின் புகைப்படங்களை பின்வரும் முகவரிக்கு 30.11.2024- க்குள் அனுப்பி வைக்க கலைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகவரி - இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 002. தொலைபேசி எண்.28193195,28192152" என கூறப்பட்டுள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications