கோயம்பேடு ஹேப்பி.. ஆவடி, பட்டாபிராமின் பல நாள் கனவு.. தமிழக அரசு ஒப்புக்கொண்ட சூப்பர் விஷயம்
சென்னை: சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 2026ம் ஆண்டில் இருந்து படிப்படியாக முடிந்து 2028ம் ஆண்டுக்குள் ரயில்கள் ஓடத்தொடங்கிவிடும். இந்நிலையில் அடுத்தகட்டமாக கோயம்பேடு-பட்டாபிராம் வரையிலான 21.76 கிலோ மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடமும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (கோயம்பேடு, வடபழனி வழி) ஒரு வழித்தடமும் உள்ளது. தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 80 முதல் 90 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். இதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்படி மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிலோ மீட்டர் தொலைவிற்கும் என 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் கிட்டத்தட்ட சென்னையின் எல்லா பகுதிகளுக்குள்ளும் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். இந்த பணிகள் அனேகமாக வரும் 2026ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக முடிந்து 2028ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
3ம் கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் தொடங்க உள்ளன. முதற்கட்டமாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிக்கப்பட உள்ளது. அடுத்ததாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில்கள் ஓடப்போகிறது. இதற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த சூழலில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முதலில் திட்டமிட்டிருக்கிறது. இதன்படி கோயம்பேடு-பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இந்த திட்ட அறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு ரூ.9 ஆயிரத்து 928 கோடி மதிப்பீட்டில் நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சமபங்கு நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டப்பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கோயம்பேடு-பட்டாபிராம் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில், கோயம்பேடு, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரை இணைக்கப்படும். இதேபோல, கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட்ஸ் ஜங்சன், அம்பத்தூர் எஸ்டேட், டன்லப், அம்பத்தூர் ஓ.டி., திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்தூரிபா நகர், இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications