அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை.. ஆன்லைன் விண்ணப்ப காலஅவகாசம் மே 24 வரை நீட்டிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தேதி என்பது மே 24 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பிஎஸ்சி, பிஏ, பிகாம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

முன்பை விட தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் படித்தாலும், என்ஜினியரிங் படித்தாலும் அதிக செலவு ஏற்படும். இதனால் தனியார் மற்றும் என்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்க இயலாத மாணவர்கள் மற்றும் கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கியது. பிளஸ் 2 ரிசல்ட் கடந்த 4ம் தேதி வெளியானது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் கடந்த 6ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் வசதிக்காக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த ஆன்லைன் விண்ணப்பத்துக்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் மாணவர்கள் சார்பில் ஆன்லைன் விண்ணப்பத்துக்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி நேற்றுடன் முடிவடைந்த விண்ணப்ப தேதியை மே 24ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06.05.2024 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது. இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 24.05.2024 ம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitaion Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ.48 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணமாக ரூ.2 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யூபிஐ மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களி்ல், ‛‛The Director, Directorate of collegiate Education, Chennai - 15'' என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாக செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 044 - 24343106/24342911 என்ற எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் உதவிகளை பெறலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications