"இறையன்பு" அதிரடி.. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. பீலா ராஜேஷ் கூடவா? திடீர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 12 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.. துறை ரீதியான விஷயங்களில் தீவிர கவனத்தையும் மேற்கொண்டு வருகிறது.. கடந்த 2 மாதத்தில் மட்டும், ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் அதிக அளவு நடந்துள்ளது..
அதிலும், மே மாதம் கிட்டத்தட்ட 21 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் முக்கிய அதிகாரிகள் பலர் முக்கிய துறைகளுக்கு நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு முறையும் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்புகள் வரும்போதெல்லாம், இனியும் அதிகாரிகள் மாற்றம் அதிகமாக நடக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியவண்ணம் இருந்தன. அந்தவகையில், இப்போதும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

என்ன காரணம்: அதன்படி, நில சீர்திருத்த துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராகவும், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிவரித்துறை இணை ஆணையராகவும், பட்டு வளர்ச்சி துறை இயக்குநர் விஜய ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநர் ஆயிஷா மரியம், சிறுபான்மையில் நலத்துறை ஆணையராகவும், ஊரக வளர்ச்சி துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சாமூரி, பட்டு வளர்ச்சி துறை இயக்குனராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரவு: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் விஜய குமார், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராகவும், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவர் ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவராகவும், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications