Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்கள் " மெகா செக்"? திமுகவை முந்துதா அதிமுக? சிறுபான்மையினர் ஓட்டு எடப்பாடி பழனிசாமிக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகும் நிலையில், அதிமுக, திமுக இரு மெகா கட்சிகளுமே களப்பணியில் இறங்கியிருக்கின்றன.. அந்தவகையில், இந்த முறை அதிக ஓட்டுக்களை பெற போகும் கட்சி எது என்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை சிறுபான்மையினர் ஓட்டுக்களை தன்னகத்தே வலுவாக வைத்து கொண்டிருக்கிறது.. அதிமுகவை பொறுத்தவரை, பெண்களின் வாக்குகளை தன்னகத்தே வலுவாக வைத்து கொண்டிருக்கிறது. ஆனால், எப்படி பார்த்தாலும், எம்ஜிஆர் காலம் முதலே, திமுகவைவிட, அதிக வாக்கு வங்கியையே பெற்றிருப்பது அதிமுகதான்.

திமுக வெற்றி: எனினும், கடந்த முறை ஆட்சியை தவறவிட்டது.. அதிமுகவை பொறுத்தவரை, 2001ல் வெறும் 31.4 சதவீத ஓட்டுகளுடன் 132 இடங்களில் வென்றுஆட்சியை பிடித்தது.

Tamil nadu Government Employees and Are these things that are favorable to AIADMK Edappadi Palaniswami

பிறகு, 2011ல் 38.4 சதவீத ஓட்டுகளுடன், 150 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.. பிறகு, 2016ல், 40.8 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 2019 -ல் 18 சதவீத ஓட்டு மட்டுமே பெற்றது என்றாலும், 2021 சட்டசபை தேர்தலில், 34.24 சதவீதமாக உயர்த்திக் காட்டியது.
கூட்டணி: ஆனாலும், ஆட்சியை அதிமுகவால் தக்க வைக்க முடியாமல் போனது.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றார்கள்.. அதேபோல, கூட்டணி விஷயத்தில் திமுக அளவுக்கு., அதிமுக கையாளவில்லை என்றார்கள்..

முக்கியமாக, விஜயகாந்த்தை கூட்டணியில் மிஸ் பண்ணியிருக்க கூடாது என்றும், பாஜக எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி தரப்பு செவிமடுக்கவில்லை, அமமுகவையாவது கூட்டணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் வலம் வந்தன. மொத்தத்தில் திமுக அளவுக்கு, அதிமுகவின் கூட்டணி பலமாக இல்லாததே தேர்தல் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது.

அதிமுக ஓட்டுக்கள்: இந்நிலையில், இழந்துபோன அதிமுகவின் ஓட்டுவங்கியை பெற்றாக வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார். அதற்காகவே, முதல்காரியமாக, கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டியும் விட்டுள்ளார். ஓவைசி கட்சி, தமீமுன் அன்சாரி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவையும் அதிமுக பெற்றுவருவதை மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவுக்கான வாக்கு வங்கியானது வரும் தேர்தலில், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சர்கள் சொல்லி வருகிறார்கள். அந்தவகையில், மூத்த அரசியல் விமர்சகர் கலை, ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், வரும் தேர்தலல் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை லிஸ்ட் போட்டு சொல்லி உள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

மதுரை மாநாடு: "மத்திய அரசு மீது இருக்கும் அதிருப்தி ஓட்டுக்கள், இந்த முறை அதிமுகவுக்குதான் போகுமே தவிர, திமுகவுக்கு போகாது.. இத்தனை காலமும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால், வெறும் 3 சதவீத வாக்குகள்தான் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது பாஜகவை விட்டு கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டதால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.

ஜனவரி 7ம் தேதி எஸ்டிபிஐ கட்சி மதுரையில் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியைதான் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் கிறிஸ்தவ கூட்டமைப்பு நடத்திய மாநாட்டிலும், எடப்பாடி பழனிசாமியைதான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதேபோல, திமுக அரசு மீது அதிருப்தி அடைந்த மைனாரிட்டி கிறிஸ்தவர்களும், அதிமுக பக்கம்தான் போவார்கள். அதேபோல, பாஜகவை விட்டு, அதிமுக வெளியே வந்ததையும் சிறுபான்மையினர் ஆதரிக்கிறார்கள்..
பாஜக? காங்கிரஸ்: இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.. பாஜகவா? காங்கிரஸா? என்று சாய்ஸ் வரும்போது, இந்தியா கூட்டணிக்கட்சிக்குதான் சிறுபான்மையினர் ஆதரவு தருவார்கள். ஆனால், இங்கே பாஜக, சாய்ஸிலேயே இல்லை. அதனால், அதிமுக Vs திமுக மட்டும்தான் சாய்ஸாக உள்ளது. எனவே, சிறுபான்மையினர் 2 கட்சிகள் பக்கமும் போகக்கூடும்.

எனினும் தேர்தல் நெருக்கமாக வரும்போது, அதிமுக பக்கம் வர வாய்ப்புள்ளது.. காரணம், மத்தியில் ஆட்சியில் புரிந்த காங்கிரசும், பாஜகவும் இருவருமே நம்மை ஏமாற்றிவிட்டார்கள், என்ற பிரச்சாரத்தை முன்வைப்பார்கள்.. எனவே, தமிழ் உணர்வாளர்கள், தமிழக நலன் என்று சொல்லும்போது, அதிமுக பக்கமே ஆதரவு தருவார்கள்.

அரசு ஊழியர்கள்: இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த ஊழியர்களின் மனைவி, குழந்தைகளை சேர்த்தால், 61 லட்சம் வாக்காளர்கள் வருவார்கள்.. இவர்களில் 45 லட்சம் பேர், கடந்த 2021-ல் திமுகவுக்குதான் ஓட்டுப்போட்டார்கள். அப்படி போட்டும்கூட, வெறும் 3 சதவீதம் வாக்குகள்தான், அதிமுகவைவிட திமுக அதிகமாக பெற முடிந்தது.

மொத்தம் 43 தொகுதிகளில் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றுள்ளது. 37 தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றுள்ளது.. இதெல்லாம் சேர்த்து பார்த்தாலே, வெறும் 2 லட்சம் வித்தியாசத்தில்தான் திமுகவிடம் அதிமுகவினர் தோற்றிருக்கிறார்கள்.

வாக்குகள்: தற்சமயம், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசு அதிருப்தியில் உள்ளனர்.. காரணம், பழைய பென்ஷன் திட்ட வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததால், வருத்தத்தில் உள்ளதால், இதில் பெரும்பாலானோர் அதிமுகவுக்கும் ஓட்டுப்போடலாம்" என்று தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார் மூத்த அரசியல் விமர்சகர் கலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+