அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி.. மிஸ்ஸிங்? ஆபீசுக்கு வரலயா? வெறிச்சோடிய தமிழக அரசு அலுவலகங்கள்: பார்ரா
சென்னை: அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கும் முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில், 54,700 சதுர அடி பரப்பளவிலும், 360 அடி நீளத்திலும், 235 அடி அகலத்திலும், தரையில் இருந்து 16.5 அடி உயரத்திலும் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழாவும் நேற்றைய தினம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்த கும்பாபிஷே நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்தியா முழுவதுமுள்ள விவிஐபிக்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
வீடுகளில் தீபம்: கும்பாபிேஷகம் நடக்கும் நாளில் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்யுமாறு பொது மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.. அதன்படியே, வீடுகளில் வண்ணக் கோலமிட்டு, ராம தீபம் ஏற்றப்பட்டது.. கோயில்களிலும் விசேஷ ஏற்பாடுகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக, மக்களின் நம்பிக்கை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 22ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருந்தார்..
கும்பாபிஷேகம்: அதாவது, கும்பாபிஷே கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க ஏதுவாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி மூடப்படும். இது தொடர்பான உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை பின்பற்றி, 22ம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்திருந்தன. அதனால், தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்குமாறு அரசுக்கு, பாஜக கோரிக்கையும் விடுத்திருந்தது. ஆனால், விடுமுறை அளிக்கப்படவில்லை.
ஆபீசுக்கு லீவு: எனினும், நேற்றைய தினம், பல அரசு ஊழியர்கள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டார்களாம்.. விடுப்பு எடுத்துக்கொண்டு, கோவில்களுக்கு சென்றும், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக, எழிலகம், டிபிஐ வளாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வழக்கமாக, சனி, ஞாயிறு லீவு முடிந்து, திங்கட்கிழமை என்றாலே, அனைத்து அரசு அலுவலகங்களும் உச்சக்கட்ட பரபரப்புடன் காணப்படும்.. ஆனால், நேற்றைய தினம், பல ஊழியர்களும் விடுப்பு எடுத்திருந்ததால், அந்த வழக்கமான பரபரப்பு மிஸ்ஸிங் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications