அரசு ஊழியர்களுக்கு குஷி.. பொங்கல் பரிசு ரூ.1000 "இவங்களுக்கும்" வேணுமாம்.. தமிழக அரசு என்ன சொல்லுமோ?
சென்னை: பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை வழங்குவது துவங்கப்படும் நிலையில், மற்றொரு கோரிக்கை தமிழக அரசுக்கு சென்றுள்ளது.. இது தொடர்பான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ரொக்க பணம்: தமிழகத்தில் வழக்கமாகவே, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணமும் அளிக்கப்பட்டு வரும்நிலையில், இந்த வருடமும் பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் ஆரம்பத்தில் தென்பட்டது. ஆனாலும், உடனடியாக பொங்கல் பரிசுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதேசமயம், 4 லட்சம் ரேஷன்தாரர்கள் உட்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என்று 24 லட்சம் கார்டுதாரருக்கு பரிசு தொகுப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியானது. இதனால், ஒருதரப்பினர் அதிருப்திக்கு ஆளானார்கள்..
பச்சரிசி: ஆனால், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்குமே தலா, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளதாகவும், அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உள்ளதாகவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசு டாக்டர்களும் பொங்கல் பரிசு கேட்டு கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், எஸ்.பெருமாள் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். "முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்கள் போராட்டத்தில் பங்கேற்றத்துடன், ஆட்சிக்கு வந்தால், ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து, 2 வருடத்துக்கு மேலாகும் நிலையில், எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை..
ஊதிய உயர்வு: இந்த வருடமாவது, பொங்கல் பரிசாக, எங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, அரசாணை 354ன்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே, போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஸ்டிரைக் அறிவித்திருக்கிறார்கள்.. மற்றொருபக்கம் பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் அவ்வப்போது போராட்டம் நடத்தியபடியே வருகிறார்கள்..
எகிறும் எதிர்பார்ப்பு: அதேபோல, 1000 ரூபாய் உரிமைத்தொகை தங்களுக்கு மறுக்கப்படுவதாக, மாற்றுத்திறனாளிகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், ஊதிய உயர்வில் அரசு டாக்டர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், அதை பொங்கல் போனஸாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருப்பது, மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications