Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய வாகனங்கள்.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு..வாகனங்களை பதிவு செய்வதில் வந்தது மாற்றம்.. புது அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய வாகனங்கள், பழைய அரசு பேருந்துகள் குறித்து, தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அரசாணையையும் அதிரடியாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்சனை விஸ்வரூபமெடுத்து வருகிறது.. காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வுகளை, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

Tamil Nadu Government extends Registration 1 year to 15 year old Government Vehicles

அதேசமயம், இந்த மாசுபாட்டை குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டது.. இந்த தடை உத்தரவானது, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கும் வந்தது.

அறிவுறுத்தல்: இதையடுத்து தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும், 15 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டில் உள்ள வாகன விவரங்களை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களிடம் போக்குவரத்து ஆணையர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.. இதில் மொத்தம் 10,730 வாகனங்கள் இருப்பது தெரியவந்தது.. குறிப்பாக, அரசுப்பேருந்துகள், தீயணைப்பு வாகனங்கள், சுகாதாரத்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவையும் அதில் அடங்கும்.

இதில் 5,739 வாகனங்களை முதல்கட்டமாக பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்தது. எனினும், பொது சுகாதாரத்துறை மற்றும் பொது போக்குவரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒரே கட்டமாக ஆயிரக்கணக்கான வாகனங்களை முடக்கினால், அது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், 6341 அத்தியாவசிய வாகனங்களின் பதிவை, வருகிற 2024 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து: இதுகுறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் உள்ளதாவது: போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட, 15 ஆண்டுகளுக்கும் மேலான சுமார் 10,730 வாகனங்கள் அரசுக்கு சொந்தமானவை மற்றும் இயக்கப்படும் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்கு வரத்துகளை ஏழை மக்கள் நம்பியிருப்பதால் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

மேலும் 10,730 வாகனங்களில் பல வாகனங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பொதுமக்கள் ஆகியவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளைச் சேர்ந்தவை.

வாகனங்கள்: எனவே, இந்த வாகனங்கள் திடீரென சாலையில் நிறுத்தப்பட்டால், அது மாநில அரசின் சேவை வழங்கல் முறையைப் பாதிக்கும். இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக நேரிடும். இது கிராமப்புறங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கும், பேருந்து சேவைகளால் பாதிக்கப்படும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, இந்த வாகனங்களை ஸ்கிராப் செய்வதில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன், ஒரு கணக்கீடு மற்றும் நனவான முடிவை எடுப்பது அவசியம்.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் 1989 விதி 87ன் படி, உடற்தகுதிச் சான்றிதழைப் பதிவுசெய்து வழங்குவதற்கான அதிகாரங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் உள்ளது. அதேபோல், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தகுதிச் சான்றிதழை வழங்க தகுதியான அதிகாரிகளாக உள்ளனர்.

உடற்தகுதி சான்றிதழ்: எனவே, பதிவு செய்யும் அதிகாரிகளாக இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பதிவுச் சான்றிதழின் செல்லுபடியை மேலும் ஒரு வருடத்திற்கு அல்லது 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கவும் உடற்தகுதி சான்றிதழை வழங்கவும் அனுமதிக்கலாம்.

மேலும் இந்த பதிவு நீக்கப்பட்ட வாகனங்களை பொதுவில் இயக்குவது அவசியம் வட்டி, வாகனங்களின் சாலை தகுதிக்கு உட்பட்டு, கவனமாக ஆய்வு செய்த பிறகு, போக்குவரத்து ஆணையரின் முன்மொழிவை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது.

சான்றிதழ்: அதன்படி பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் மற்றும் 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் பதிவு காலத்தை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பிக்கிறது. எனவே, போக்குவரத்து ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதிவுச் சான்றிதழின் செல்லுபடியை 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+