2 முக்கிய ஆக்சன்! உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்குல்ல.. உங்களுக்குத்தான் இந்த செய்தி! ரேஷனில் புரட்சி
சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் புதிய புரட்சி ஒன்று நடக்கிறது என்றுதான் கூற வேண்டும். மக்கள் பலரும் பல காலமாக எதிர்பார்த்த முக்கிய மாற்றங்கள் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் சிறப்பாக இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு ஆகியவை மலிவான விலையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் ரேஷன் கடைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறிவிப்பு 1 : தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகளில் சிதிலம் அடைந்த பழைய ரேஷன் கடைகளை உடனே மூட வேண்டும். புதிய கடைகளை கட்ட வேண்டும். தற்காலிகமாக கிராம மண்டபங்களில் ரேஷன் கடைகள் இயங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி பழைய ரேஷன் கடைகளை உடனே புனரமைக்க வேண்டும் என்ற உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
அறிவிப்பு 2: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.07.2023 முதல் 31.07.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.49,40,516/- (ரூபாய் நாற்பத்தொன்பது லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று பதினாறு மட்டும்) மதிப்புள்ள 3610 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம்பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயலில் ஈடுபட்ட 619 190 வாகனங்களும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன்கீழ் 1 நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என்று கூறப்பட்டு உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications