ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு.. குடும்ப அட்டைதாரர்களே தமிழக அரசு அறிவித்ததை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் நாளையும் நாளை மறுநாளும் பொருட்கள் வாங்க முடியாது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 2.25 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

ration shop ration card Tamil Nadu

ரேஷன் கடைகளில் முன்னுரிமை கார்டுகளுக்கு (PHH) சர்க்கரை உள்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. முன்னுரிமை கார்டுகளான அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) கார்டுகளுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. இதேபோல் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கு (NPHH) அரிசி உள்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது.சர்க்கரை விருப்ப கார்டுகளுக்கு (NPHH-S) அரிசி தவிர மற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. பொருளில்லா அட்டைகளுக்கு (NPHH-NC) எந்த பொருளும் வழங்கப்படுவது இல்லை.

ரேஷன் கடைகளில் தற்போது துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் முறையாக இல்லை என்ற புகார்கள் உள்ளது. அரிசி, சர்க்கரை போன்றவை தான் சரியாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு கேட்டால் மாதக்கடைசியில் வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் நாளையும் நாளை மறுநாளும் பொருட்கள் வாங்க முடியாது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த ஆண்டு மேற்கொண்டனர். இந்தப் பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளா்கள் மேற்கொண்டனா். இந்த 2 நாள்கள் பணிக் காலத்தை ஈடுசெய்யும் வகையில், ஜூன் 15-ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அந்த வகையில் நாளை மறுநாள் ரேஷன் கடைகள் தமிழகம் முழுவதும் இயங்காது. வெள்ளிக்கிழமை என்பதால் நாளையும் ரேஷன் கடைகள் இயங்காது. இனி அடுத்து ஜூலை 21ம் தேதி தான் ரேஷன் கடைகள் இயங்கும். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் மாதக்கடைசியில் சென்றால் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+