சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநகராட்சி -நகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்! இனி எல்லாம் அதிரடி தான்! தமிழக அரசு அரசாணை!

Google Oneindia Tamil News

சென்னை: நிதி ஒதுக்குவதற்கான அதிகாரத்தை உயர்த்தி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு கூடுதல் பவரை வழங்கியுள்ளது தமிழக அரசு.

இதன் மூலம் இனி நிதி ஒதுக்குவதில் அனுமதி கோரி காத்திருக்கும் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான விவரம் வருமாறு;'

50 கேஸ் போட்டு சாதித்த ஆர்எஸ்எஸ்! ஆகட்டும் பார்க்கலாம் என கடைசிவரை மல்லுக்கட்டிய திராவிட மாடல் அரசு! 50 கேஸ் போட்டு சாதித்த ஆர்எஸ்எஸ்! ஆகட்டும் பார்க்கலாம் என கடைசிவரை மல்லுக்கட்டிய திராவிட மாடல் அரசு!

கூடுதல் அதிகாரம்

கூடுதல் அதிகாரம்

கூடுதல் அதிகாரம் தொடர்பான அரசாணையை முறைப்படி வெளியிட்டுள்ள தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தவிர்த்து தமிழகத்தின் ஏனைய அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பொது செலவினங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துவதற்கான அதிகாரங்கள் உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்க தேவையில்லை

காத்திருக்க தேவையில்லை

இதன் படி இதுவரை ரூ.35 லட்சம் வரையிலான பணிகளுக்கு மட்டும் நகராட்சி சேர்மன்கள் அனுமதி வழங்கி வந்த நிலையில் இனி ரூ.1 கோடி வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் நகராட்சிகளில் ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம் என்றும் ரூ.10 கோடிக்கு மேல் உள்ள பணிகளுக்கும், செயல் திட்டங்களுக்கு மட்டும் அரசின் அனுமதி தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கலாம்

அனுமதி வழங்கலாம்

நகராட்சி நிர்வாகத்தை போலவே மாநகராட்சி ஆணையரும் ரூ.1 கோடி வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.20 லட்சம் வரையிலான பணிகள் மற்றும் செயல்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி வந்த மேயர்கள் இனி ரூ.50 லட்சம் வரையிலான பணிகளுக்கு தாராளமாக அனுமதி வழங்க முடியும்.

சென்னையை தவிர

சென்னையை தவிர


நகராட்சியை போலவே மாநகராட்சிகளிலும் ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம் என்றும் அதற்கு மேல் உள்ள பணிகளுக்கு மட்டும் அரசின் அனுமதி தேவை எனக் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சென்னையை தவிர மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு மட்டும் பொருந்தும்.

English summary
Tamil Nadu Government has increased the power to allocate funds and given additional power to the Corporation and Municipalities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X