டெய்லி பஸ்ஸில் போவீங்களா.. உங்களுக்காகவே வெளியான தமிழக அரசின் சூப்பர் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேருந்துகளில் சில்லறை பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சூழலில் தான் தினமும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தமிழக அரசு நல்ல செய்தி கூறியிருக்கிறது.

தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி என எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டவுன் பஸ்களை இயங்கி வருகிறது. விரைவு போக்குவரத்துக்கழகம், சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் எஸ்இடிசி (விரைவு பேருந்து) பேருந்துகளை இயக்கி வருகிறது.

Tamil Nadu government has given good news to the passengers who travel by bus every day

மற்ற போக்குவரத்து கழகங்கள் நகர் பகுதி முதல் கிராமங்கள் வரை மட்டுமின்றி மலைப்பகுதியிலும் பேருந்துகளை இயக்கி வருகின்றன. லாப நோக்கமின்றி ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கி தமிழகத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டு நிலவரப்படி 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.70 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அரசு பேருந்துகளில் தான் அதிகம் பேர் பயணிக்கிறார்கள். அரசு பேருந்துகள் தான் தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்குகின்றன. ஆனால் அரசு பேருந்துகளில் பொதுவாக இப்போது ஒரு பிரச்சனை உள்ளது. அது சில்லறை பிரச்சனை. சில்லறை தட்டுப்பாடு காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள், பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், கடுமையாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உள்பட மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என்று நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் பேருந்துகளில் பயணிகளிடம் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்கக் கூடாது என்றும் டிக்கெட்டுக்கு பயணிகள் அளிக்கும் பணத்தைப் பெற்று உரிய மீத தொகையை வழங்க வேண்டும் என்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது..

மேலும், பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துறை எச்சரித்துள்ளது.

இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் சில்லறை பிரச்சனை சரி செய்ய,கூகுள் பே,போன் பே போன்ற யூபிஐ வசதிகளை பேருந்துகளில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+