தமிழகத்தில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. ஷிவ்தாஸ் மீனா மாநில அரசு பணிக்கு மாற்றம்!
சென்னை:தமிழகத்தில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சர்க்கரை உற்பத்தி துறை ஆணையர்/கூடுதல் தலைமை செயலாளராக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஷிவ்தாஸ் மீனா, மத்திய அரசு மாசுக் கட்டுப்பட்டு வாரிய தலைவராக இருந்து வந்தார். இவரை மாநில அரசு பணியிடத்துக்கு மாற்றம் செய்யும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதன்படி ஷிவ்தாஸ் மீனா மாநில அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications