தமிழ்நாட்டில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. யார், யார் எங்கே தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்துறை சிறப்பு செயலராக லில்லி நியமிக்கப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண் இயக்குநராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலைகள் திட்ட பணி இயக்குநராக பி.கணேசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications