அமலுக்கு வந்த புதிய மின்சார கட்டண உயர்வு.. யார் யார் எவ்வளவு இபி பில் கட்டணும்.. இதை படிங்க!
சென்னை: தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் வீடுகளுக்கு எந்த விதமான மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டது.
400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டது. 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டது. 600 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்பட்டது.

அப்போது இந்த மின் கட்டண உயர்வு சர்ச்சையான நிலையில், மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருந்தார். அதில், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.
எரிசக்தி துறை அமைச்சகம் சார்பாக இந்த அழுத்தம் தரப்பட்டது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் அரசு மானியத்தை நிறுத்துவோம். நீங்கள் நிறுத்தவில்லை என்றால் மத்திய மின் துறை திட்டத்தை நாங்கள் உங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் 1 வருடமாக மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார்.
1 வருடமாக அவர் மின் கட்டணத்தை மாற்றாமல் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த மின்சாரத்துறை கூட்டத்தில் மத்திய அரசு எங்களிடம் அழுத்தம் கொடுத்தது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கண்டிப்பாக மானியம் தர மாட்டோம் என்றார். நான் இதன்பின் டெல்லி சென்று பேசிய போதும் எங்களிடம் கறாராக பேசினார்கள். மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்கள்.
28 முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. தனியார் மின் நிறுவனங்களுக்கும் இதற்காக கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதாவது மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு நீங்கள் மின்சாரம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டது.

அந்த அளவிற்கு அவர்கள் பிரஷர் கொடுத்ததே மின்சார உயர்விற்கு காரணம். வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். மற்ற மாநிலங்களை விட குறைவாகவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூறி இருந்தார்.
மீண்டும் உயர்வு: இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை வீடுகளுக்கு எந்த விதமான மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
பொதுவாக வருடா வருடம் மின் கட்டணத்தில் 4.7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட வேண்டும். மின்சார உற்பத்தி மற்றும் பணவீக்கத்தை வைத்து இந்த உயர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் உயர்வு செய்யப்பட்டு விட்டதால் இந்த முறை மின் கட்டணம் 2.18 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது. அதுவும் கூட தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மின்சார கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 10 காசு முதல் 25 காசு வரை கூடுதல் கட்டணத்தை கூடுதலாக கட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக இந்த நிறுவனங்கள் நிலையான கட்டணமாக ரூ.550 செலுத்தி வந்த நிலையில் இனி ரூ.562 செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வால் வீட்டு மின்சாரத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. குடிசை, விசைத்தறி தொழிலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
அதேபோல் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மின்சார துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications