Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் சுமையில் தமிழ்நாடு? யார் காரணம்? டாப் 5 பாயிண்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. 'இது கனவு பட்ஜெட். நாளை முதல் நனவாகும்' என்று பெருமையாகக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இது மக்களுக்குப் பயன்தராத பட்ஜெட். தமிழ்நாடு அரசின் கடன் ரூ.8.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள். மின் கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள். வீட்டு வரியை அதிகரித்துள்ளார்கள். ஆக, அதிமுக ஆட்சியைவிட அதிக வருவாய் வருகிறது. அப்புறம் ஏன் இவ்வளவுக் கடன்?

Tamil Nadu government in debt? : Who is responsible

நாங்கள் மடிக்கணினி கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் கொடுத்தோம். இப்படி அதிமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திவிட்டு, அந்த நிதியை வேறு திட்டங்களுக்குச் செலவு செய்கிறார்கள். புதிய திட்டங்களே ஒன்றும் இல்லையே?’ என்று மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

அதற்கு இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “2011-12 இல் ரூ 1,30,630 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், 2020-21இல் ரூ. 4,85,502 கோடியானது. அதைப்போன்று 2014இல் ரூ. 54 லட்சமாக இருந்த மத்திய அரசின் கடன் தற்போது ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதைப்பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமியின் வாய்க்கு யார் பூட்டுப் போட்டது” என்று மிகக் கடுமையாகப் பதிலளித்திருக்கிறார்.

மாநில அரசின் கடன் அதிகரிக்க என்ன காரணம்? சில முக்கியமான பாயிண்டுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன்.

Tamil Nadu government in debt? : Who is responsible

பாயிண்ட் 1:

மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பைப் பிரதானமாகக் கொண்டு, தென் இந்திய மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியை மிகப்பெரிய அளவில் மத்திய அரசு கடந்த மூன்று பட்ஜெட்களில் குறைத்துள்ளது. அதனால், மாநில அரசு நிதிச்சுமையானது அதிகரித்துள்ளது. ஆகவே கடன்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவைதான் மிக முக்கியமான பாயிண்டுகள்.

பாயிண்ட் 2:

ஆகவே, மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதைத்தாண்டி மாநில அரசு தன் சக்தியைப் பயன்படுத்தி நகரத்தை மீட்டுள்ளது.

அதைப்போல் தென் தமிழகமும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் ஏற்பட்ட சேதங்கள் அதிகம். ஒரே காலகட்டத்தில் 4 மாவட்டங்களை மாநில அரசு மீட்டுள்ளது.

அதற்கான நிதி என்பது மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாகச் செலவிடப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு என்று வருமானம் இல்லை. வரி மூலம் கிடைக்கும் வருமானம் பெரும் பங்கு மத்திய அரசுக்குச் செல்கிறது. வரி வருவாய் மூலம் கிடைக்கும் பணத்தை மாநில அரசுக்கு உரியவகையில் மத்திய அரசு பிரித்து அளிக்கவில்லை. கூடுதலாக இயற்கைப் பேரிடர் காலத்திலும் மத்திய அரசு உதவாமல் உள்ளது.

இப்படிப் பல நெருக்கடிகளைத் தாண்டிதான் தமிழ்நாடு அரசின் இந்த 2024-25 நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. அதில் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இது சிறப்பான பட்ஜெட்.

Tamil Nadu government in debt? : Who is responsible

பாயிண்ட் 3:

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டினால் கடன்பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒரு விதிமுறையை வடிவமைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு பெரு மழை வெள்ளத்தால் TANGEDCO அந்த இலக்கை எட்டவில்லை.

ஆகவே, கடன் வாங்குவதற்கான தகுதியை மாநில அரசு இழந்துவிட்டது. அதற்காக மிகப் பெரிய தொகையை மாநில அரசு மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த ஆண்டும் வழங்க வேண்டி உள்ளது. அந்த மிகப்பெரிய தொகையை பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவும் மாநில அரசுக்கு நிதி இழப்பாகி உள்ளது. மத்திய அரசு விலக்கு அளித்திருந்தால் மாநில அரசு அதைச் சமாளித்து இருக்கும்.

இயற்கைப் பேரிடரை வைத்து மத்திய அரசு ஒருவேளை நமக்கு நிதி ஒதுக்கி இருந்தால், இந்த நிதி இழப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது.
சென்னைதான் தமிழ்நாட்டின் தலைநகரம். அந்த நகரம் மிகப்பெரிய இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டது. குறைந்தது 7 நாள் இந்த நகரமே தண்ணீரில் மூழ்கியது. மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அரசு அதற்காகத் தனது கூடுதல் நிதியைச் செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டது.

வருமானமும் இந்த 7 நாள்களில் சென்னையில் இல்லை. சேதமும் அதிகம். அவற்றை இயல்புநிலைக்குக் கொண்டுவரச் செய்யப்பட்ட செலவுகளும் அதிகம். மத்திய அரசு வழக்கமான நிதியை அளித்ததோடு சரி. கூடுதல் நிதியைத் தரவில்லை.

மின்சார வாரியத்தால் கூடுதலாக விவசாயத்தையும் அதிக அளவில் முன்னேற்ற முடியவில்லை. அதனால் மறைமுகமாக விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் எஸ்.எம்.இ மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளுக்குக் கூடுதலாக மின்கட்டணம் வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தச் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அதிக நிதிச்சுமைக்கு ஆளாகி உள்ளன. அவர்களும் அதை எதிர்க்கின்றன. இதனால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதக் காலம் மின்சாரத் துறைக்கு வருமானம் குறைந்ததால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் விளக்கம் அளித்துள்ளார். அது சரியான விளக்கம்.

ஆகவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் இடையே உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு உள்ளதைப்போல் தெரியவில்லை.

Tamil Nadu government in debt? : Who is responsible

பாயிண்ட் 4:

மத்திய அரசு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு எப்படி நிதியை குறைத்துக்கொண்டே வருகிறது என்று 'தி இந்து’வில் மிகத் தெளிவாக ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். அந்தக் கட்டுரை வருகின்ற ஆண்டுகளில் நிதி இன்னும் தமிழ்நாட்டிற்குக் குறையலாம் என்று எச்சரித்துள்ளது.

முன்பு நடைமுறையிலிருந்த வாட் வரி மூலம் மாநில அரசு வரியைக் கூட்டிக் குறைக்கும் அதிகாரத்தை வைத்திருந்தது. அந்த உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டுவிட்டது. ஆகவே, மாநில அரசு நேரடியாக வரி போட முடியாது. மத்திய அரசுதான் வரி போட முடியும்.

ஆக, அதிக வரி வருவாயை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அளிக்கிறது. நிதி பகிர்வில் உரிய நிதி கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுகிறது. அப்படி என்றால், மாநில அரசு என்ன செய்ய முடியும்? நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்கமுடியும். தரவில்லை என்றால், கடன் தான் வாங்க வேண்டும்.

Tamil Nadu government in debt? : Who is responsible

பாயிண்ட் 5:

மாநில அரசிடம்தான் பல முக்கியமான துறைகள் உள்ளன. சுகாதாரம் மாநில அரசின் பொறுப்பில்தான் உள்ளது. கல்வி என்பது மாநிலப் பொறுப்பில் உள்ளது. இதற்கு எல்லாம் அதிக நிதியை மாநில அரசுதான் ஒதுக்க வேண்டும். மாநில அரசுக்கு மத்திய அரசு முறையாக நிதியை வழங்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஆகவேதான், தென் இந்தியா தனி நாடாக வேண்டிய நிலை வரும் என்று கர்நாடகாவில் ஒரு குரல் கேட்கிறது. கேரள அரசு நிதிப் பகிர்வு நியாயமாக இல்லை என்று மத்திய அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கி உள்ளது.

இப்படியான நிலையில்தான் தமிழ்நாடு அரசின் 2024-25 பட்ஜெட் சிறப்பாகப் போடப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தளவில் நான் சொன்ன பிரச்சினைகளை எல்லாம் மனதில் கொண்டு தமிழ்நாடு பட்ஜெட்டை ஆராய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+