தமிழக அரசு ஜாக்பாட்.. "இந்த" ஊழியர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்வு.. அரசாணை வெளியீடு
சென்னை: ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் அப்போது, பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

புதிய புதிய அறிவிப்புகள்: அந்தவகையில், சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானிய கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டிருந்தார்..
அதாவது, ஊரகப் பகுதிகளில் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூபாய் 275 கோடி செலவில் நடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார்..
அத்துடன், ஊரக பகுதிகளில் பணியாற்றி வரும் சுமார் 66,130 தூய்மை காவலர்களின் மாதாந்திர ஓய்வு மதிப்பூதியம் ரூபாய் 3600ல் இருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பன உட்பட மொத்தம் 15 அறிவிப்புகளை அமைச்சர் அப்போது அறிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பு தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.. அவர் அறிவித்தபடியே, தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
அரசாணை: அத்துடன், ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.. மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600-ல் இருந்து ரூ.5000-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, தூய்மை காவலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருத்த நம்பிக்கையையும் தந்து வருகிறது..
நிதி ஒதுக்கீடு: ஏற்கனவே, ஊதிய உயர்வு, மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், தூய்மை காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு இந்த நற்செய்தியை வழங்கியுள்ளது.. இந்த புதிய அறிவிப்பிற்காக தமிழக அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications