பரந்தூர் ஏர்போர்ட் பணிகளில் ‘ஜரூர்’ காட்டும் தமிழக அரசு.. திட்ட ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டெண்டர்!
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு. பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கவும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியையும் அரசு கோரியுள்ளது.
சென்னையில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இட வசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. சென்னையின் புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது.

இதற்காக சுமார் 5,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வருகின்றனர். போராட்டம் நடைபெறும் ஏகனாபுரத்தில் முதல் கட்டமாக 152.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு வெளியிட்டு வருகிறது. ஏகனாபுரம் கிராமத்தில் 8 பிரிவுகளாக பிரித்து 234 ஏக்கர் நிலம் கையக படுத்தப்படுவதாக அறிவித்தது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் அரசு கோரியுள்ளது. இதன்மூலம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications