கப்பலில் போற மாதிரி இருக்கும்.. தமிழக அரசின் புதிய வால்வோ எஸ்இடிசி பஸ்! அசந்து போக செய்யும் வசதிகள்
சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) 20 புதிய வால்வோ பஸ்களை வாங்கியுள்ளது. இந்த பஸ்சில் பயணிகளை அசந்து போகச் செய்யும் வகையிலான வசதிகள் உள்ளன. பள்ளம், மேடுகளில் பஸ் சென்றாலும் கப்பலில் செல்கின்ற மாதிரி இருக்கும் எனவும், பல பாதுகாப்பு வசதிகளும் உள்ளதாம். பஸ்சில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தாலும் கூட ஒவ்வொரு இருக்கையில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வசதியும் இருக்கிறதாம்.
வால்வோ பஸ் என்றால் சொல்லவா வேண்டும், பஸ்சில பல வசதிகள் இருக்கின்றன என பஸ் டிரைவரும் ஒருவரும் தெரிவித்துள்ளார். இந்த பஸ்சில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.

வால்வோ சொகுசு பஸ்
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு குறிப்பாக பெங்களூர், கோவை, திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் எஸ்.இ.டிசி பஸ்களும் தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதில் தனியார் ஆம்னி சொகுசு பஸ்களுக்கு இணையாக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும் வால்வோ பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 20 சொகுசு வால்வோ பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதன்படி தற்போது இந்த புதிய பஸ்களின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன ஸ்பெஷல்?
* இந்த வால்வோ பேருந்துகளை பொறுத்தவரை, BS-VI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதாவது பஸ்சின் பின்புறம் இந்த என்ஜின் இருக்கும்.
* பேருந்துகளில் ஏர் சஸ்பென்ஷன், பிரேக் போடும்போது வண்டி குலுங்காமல் இருக்க ஆன்டி-பிரேக்கிங் சிஸ்டம், வண்டி நிலை தடுமாறாமல் இருக்க வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
* மேலும் பஸ்சில் மொத்தம் 10 டயர்கள் இருக்கும். இதனால் பஸ்சானது மேடு பள்ளங்களில் சென்றாலும் குலுங்கவே குலுங்காது. கப்பலில் செல்வதுபோல் பயணம் இருக்கும்.
* பேருந்துக்குள் அகலமான நடைபாதை இருக்கும். ஒவ்வொரு சீட்களும் சினிமா தியேட்டரில் உள்ளது போன்ற சொகுசானதாக இருக்கும்.
பஸ்சின் உயரத்தை மாற்ற முடியும்
* ஒவ்வொரு சீட்டில் இருக்கும் பயணிக்கும் சார்ஜ் போடுவதற்கு வசதியாக USB போர்ட், AC வென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
* பஸ்சில் இரு இடங்களில் LED டிவி வைக்கப்பட்டுள்ளது.
* பஸ்சின் உயரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. அதாவது பஸ் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் இருந்து கொஞ்சம் உயரமாகவும், பஸ் நிறுத்தத்தில் இருக்கும் போது பயணிகள் இறங்க, ஏறுவதற்கு வசதியாக உயரத்தை குறைத்துக்கொள்ளவும் முடியும்.
இருபுறமும் லக்கேஜ்கள் வைக்கலாம்
* பஸ்சின் மொத்த நீளமானது 15 மீட்டர் ஆகும். மொத்தம் 51 சீட்கள் உள்ளன.
* 570 லிட்டர் டீசல் கொள்ளளவு பிடிக்கும். லிட்டருக்கு 3 முதல் 4 கீமீ வரை இந்த பஸ் செல்லும்.
* பயணிகள் லக்கேஜ்கள் வைப்பதற்கு என்று அதிகளவினான இடம் உள்ளது.
* பஸ்சின் இருபுறமும் லக்கேஜ்களை வைத்துக்கொள்ளவும், எடுத்துக்கொள்ளவும் முடியும்.
* பஸ்சில் ஏறும் பயணிகள் யார் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமிராவும், டிரைவர் என்ன செய்கிறார், எப்படி பஸ்சை இயக்குகிறார் என்பதை கண்காணிக்க எதிர்புறம் ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமிராவும் வைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த ஊர்களுக்கு இயக்கப்படும்?
சென்னை - பெங்களூர், சென்னை - கோவை ஆகிய முக்கிய வழித்தடத்தில் இந்த புதிய வால்வோ பஸ்கள் இயக்கப்படும் என தெரிகிறது. விரைவில் இந்த பஸ் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
கையாலும் பிரேக் போட முடியும்
இந்த பஸ் குறித்து டிரைவர் ஒருவர் கூறுகையில், "பஸ்சில் நிறைய வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக தீ பிடித்தால் கூட ஆட்டோமேட்டிக்காக தீயை அணைப்பதற்கு தண்ணீர் சீட்களின் மேல்புறம் இருந்து கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கால்களால் மட்டுமின்றி கையாலும் பிரேக் பிடித்து நிறுத்த முடியும் வசதியும் உள்ளது. 120 கிமீ ஸ்பீடில் பஸ் சென்றாலும் கையால் பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்த முடியும். அரசு பஸ்சில் இது புதுமையாக இருக்கும்" என்று கூறினார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications