புல்லட் ப்ரூஃப் வழக்கு.. விஜய்க்கு எதிராக முக்கியமான ஆதாரங்களை எடுத்த போலீஸ்.. அரசின் முக்கிய மூவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் வழக்கில் விஜய்க்கு எதிராக கடுமையான ஆதாரங்களை தமிழக அரசு திரட்டி வருவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், கடந்த செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

TVK Vijay

கரூர் வழக்கு

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணாமலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது வழக்கறிஞர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, நீதிபதி ஜோதிராமனுடன் கலந்துரையாடி, முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் அன்று எண் கொடுக்கப்படாததால் வழக்கு இன்று விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

விஜய் வழக்கு - ஆதாரங்கள்

கரூர் வழக்கில் விஜய்க்கு எதிராக கடுமையான ஆதாரங்களை தமிழக அரசு திரட்டி வருவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஏற்கனவே விஜய்க்கு எதிரான கடுமையான வீடியோ ஆதாரங்களை ஊடகங்கள் வழியாக அரசு தரப்பு வெளியிட்டு உள்ளது.

கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின்போது தவெக தலைவர் விஜய் மீது செருப்பை வீசியவர் யார் என்பதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. செருப்பு வீசியவருக்கு அருகில் போலீஸ்காரர் ஒருவர் கிழே மயங்கி விழுந்தவர்களுக்கு, உதவிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய்யின் கவனத்தை பெறவே செருப்பு வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே, தொண்டர் ஒருவர் தலையில் அடித்துக்கொண்டு கதறுவது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பலர் மயக்கமடைந்த நிலையில், நிலைமையை உணர்ந்து அந்த இளைஞர் கதறியதாக கூறப்படுகிறது. ஆனால், விஜய்யின் கவனத்தைப் பெற செருப்பு வீசப்பட்டபோதும் அவர் தொடர்ந்து பேச்சை தொடர்ந்ததும் வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.

அரசு தரப்பு வெளியிட்ட ஆதாரம்

ஏற்கனவே ரூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசு சார்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

கரூரில் தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள் என்ற கேள்விக்கு வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ள தமிழக அரசு, காவல்துறையினருக்கு விஜய் நன்றி தெரிவிப்பதையும் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு காவல்துறையினர் முதலுதவி செய்வதையும் அவர்களை மீட்பதையும் சுட்டி காட்டி விளக்கம் அளித்துள்ளனர்

சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில் வீடியோவை வெளியிட்டு தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. அதில், தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான
பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது; 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுச்சாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர், என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அரசு தரப்பு வெளியிட்டு உள்ளது.

இப்படி கரூர் வழக்கில் விஜய்க்கு எதிராக கடுமையான ஆதாரங்களை தமிழக அரசு திரட்டி வருவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. வழக்கை புல்லட் ப்ரூஃப் போல வலிமையாக கட்டமைக்க வேண்டும் என்று அரசு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+