TNEA 2025: தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை: தமிழகத்தில் 2025- 2026-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2 லட்சம் பொறியியல், பி.டெக் படிப்பில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது வரும் 8ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கவுன்சலிங்கிற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
நாளை தொடங்கப்படும் இந்த விண்ணப்ப பதிவு ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications