குடும்ப அட்டைதாரர்களே ராதாகிருஷ்ணன் சொன்னதை கவனிச்சீங்களா? இனி உங்களுக்கு ஆரோக்கிய வாழ்வுதான்!
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு, தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு பொருளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பலனடைவார்கள். இது பட்ஜெட்டிலேயே சொல்லப்பட்டதுதான்.
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு மானிய விலையிலும் விலையில்லாமலும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு நிறைய சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. கடந்த காலங்களில் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நிறைய விலையில்லா பொருட்களை கொடுத்துள்ளனர். அது போல் திருமண உதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை ரூ 12 ஆயிரம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அது போல் பொங்கல் தொகுப்பு பொருட்கள், வெள்ள நிவாரணம், கொரோனா உதவித்தொகை உள்ளிட்டவையும் இந்த ரேஷன் கார்டுகளை வைத்து வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே புத்தகம் போல் இருந்த ரேஷன் கார்டுகளில் பக்கங்கள் தீர்ந்து விட்டால் அதில் இணைப்புகள் ஒட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.
பலரது கார்டுகள் கந்த கோலமாகவே இருந்தன. இவை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் அட்டையாக மாற்றப்பட்டு மொபைல் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டது. அது போல் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையை பெற நிறைய பேர் ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து வருகிறார்கள்.
கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 2.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் புதிய பொருட்களை விநியோகம் செய்வது குறித்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஏற்கெனவே ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்து கடந்த ஆண்டு முதல் நீலகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
எனவே கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் விவசாயிகளிடமிருந்து ஆண்டு முழுவதும் கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு இந்திய உணவு கழகத்திடம் அனுமதியையும் தமிழக உணவுத் துறை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அது போல் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. அது போல் தமிழக ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சிறுதானியங்களில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், இது சர்க்கரையின் அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். எப்போதும் வெள்ளை நிறத்தில் அரிசி உணவை சாப்பிடுவதற்கு பதில் இது போல் சிறுதானியங்களை சாப்பிடலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications