ரவுண்டா ரூ.3000.. பொங்கலுக்கு தமிழக அரசின் போனஸ்! ரெடியானரேசன் கார்டு லிஸ்ட்! அமைச்சர் சொன்ன ரகசியம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத்தொகுப்பு மற்றும் பணத்தை ரேஷன் அட்டைதாரர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு ரூ.3000 ரொக்கப் பரிசு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பொங்கல் பரிசு ரகசியமானது எனவும், அதனை முதலமைச்சர் அறிவிப்பார் எனக் கூறியுள்ளார் அமைச்சர் ரகுபதி.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அரசு பரிசுத் தொகுப்பை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரசு பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த வருடம் பணத்தொகையும் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. சில தகவல்களின் படி, இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பொங்கல் பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பரிசுத்தொகை
இதற்கான நிதி ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசாக பணமும், பொருட்களும் சேர்த்து வழங்கப்பட்டது. கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றுடன் ரூ.500 ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியதும் நினைவில் இருக்கிறது.
திமுக அரசு திட்டம்
தற்போதைய திமுக ஆட்சியில் பணத் தொகை வழங்கப்படாதது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த அதிருப்தியை சமாளிக்கவும், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணத் திட்டம் வழங்கவும், இந்த ஆண்டு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ரூ.3000 வழங்கப்படும் வாய்ப்பே அதிகம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கிடையே பொங்கல் பரிசு ரகசியமானது எனவும், அதனை முதலமைச்சர் அறிவிப்பார் எனக் கூறியுள்ளார் அமைச்சர் ரகுபதி.
அமைச்சர் ரகுபதி
இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் ரகுபதி," மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத் தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்." என கூறியுள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பு
இதன் மூலம் இந்த பொங்கலுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அது எவ்வளவு தொகை என்பது தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications