அப்படி போடு.. பெண்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு.. ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இலவச பேருந்து பயணம் உட்பட பெண்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு குட்நியூஸ் கொடுக்கும் அளவிற்கு முக்கியமான செய்தி ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவர்கள் தொழில் தொடங்க பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக தமிழ்நாட்டில் பெண்கள் சுயதொழில் தொடங்க நிறைய திட்டங்கள் உள்ளன. அதிலும் பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்பிற்கு பெரிய அளவில் வரவேற்புகள் உள்ளன.

ஸ்டார்ட் அப்
தமிழ்நாட்டில் பெண்கள் ஸ்டார்ட் அப்பிற்கு என்று TANSEED மூலமாக நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்ட நிதி உதவி அளிக்கும் திட்டம் சமீபத்தில்தான் இதற்காக தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் சேர்ந்து இயங்கும் ஸ்டார்ட் அப் போன்ற நிறுவனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை அரசே நிதி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இடையே இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு குட்நியூஸ் கொடுக்கும் அளவிற்கு முக்கியமான இன்னொரு செய்தி ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

என்ன செய்தி?
அந்த தமிழ்நாட்டில் பெண்களுக்கு 'இலவச தையல் இயந்திரம்' வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆதரவற்ற பெண்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள், பெற்றோர் இல்லாத பெண்கள் ஆகியோருக்கு எல்லாம் இந்த திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும். சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே 30 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளதுதான். இந்த முறை அதிக பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

தையல்
2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.1.35 கோடி இந்த திட்டத்திற்காக செயல்படுத்தப்பட்டது. இந்த முறை அதை விட அதிகமாக செலவு செய்யப்பட உள்ளது. கடந்த முறை 2250 பேருக்கு இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த வருடம் 2500க்கும் அதிகமானோருக்கு கொடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற 20- 40 வயது இருக்க வேண்டும். பெண்கள் ஆதரவற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால் பதிவு பெற்ற தையல் நிறுவனம் ஒன்றில் விண்ணப்பதாரர்கள் பயிற்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000க்கு கீழ் இருக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய கட்டுப்பாடுகள் ஆகும். மேலும் அவர்களின் தங்கும் இடம் தமிழ்நாடு விலாசத்தில் இருக்க வேண்டும், என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள்
தமிழ்நாட்டில் இலவச பேருந்து பயணம் உட்பட பெண்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஈரோடு பிரச்சாரத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications