Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூர்யவம்சம் சின்ராசு மாறி ஆகிடலாம்.. 15 லட்சத்தை அள்ளித் தரும் தமிழக அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் மாநிலங்களில் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அவர்களது வாழ்வாதாரம் இன்னும் உயரவில்லை என்பது மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

ஆனால் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரம் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் நலத்திட்டங்கள். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Tamil Nadu Government Loan Unemployed Youth

படித்த வேலையற்ற இளைஞர்கள்

இந்த நிலையில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு தொழில் செய்ய 15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதில், ரூ.3.75 லட்சம் மானியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர் கடன் திட்டம்

இதுதொடர்பான அறிவிப்பில்," தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம்.

15 லட்சம் கடன்

UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 45, சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர், பழங்குடியினர். மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கையர்) 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தொழில் தொடங்க உதவி

இத்திட்டத்தின் கீழ் விண்ணபிக்க விரும்புவோர், தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர் தங்கள் மாவட்டங்களில் உள்ள தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி விற்கலாம். மளிகை கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி கடை மொபைல்/உபரிபாகங்கள் கடை, வாகன உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் உள்ளிட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. இதற்காக www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+