Public Holiday: 2026-ல் பொது விடுமுறை எத்தனை நாட்கள்! தமிழக அரசு வெளியிட்ட ஹாலிடே லிஸ்ட்!
சென்னை: 2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்கள் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
ஆண்டுதோறும் குறிப்பிட்ட பண்டிகைகளுக்கு அரசே விடுமுறை அறிவித்துவிடும். சில பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதும் வழக்கம். அவ்வாறு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் போது வேறு ஒரு சனிக்கிழமையில் வேலை நேரமாக அறிவிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோயமுத்தூர், மதுரை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே மாதிரியாக இந்த விடுமுறை பொருந்தும்.
இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலை, பயணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை முன்கூட்டியே திட்டமிட உதவும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசு விடுமுறைகள், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், தேசிய, கூட்டுறவு வங்கிகள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், பல்வேறு துறைகள், பொதுத் துறை அலுவலகங்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.
இந்த விடுமுறைகள் போதாது என ஒவ்வொரு மாதத்திலும் வரும் 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் மூடப்பட்டிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டு தமிழக அரசு விடுமுறை பட்டியலில் மொத்தம் 24 அரசு விடுமுறைகள் இடம்பெற்றுள்ளன. இதில் தேசிய விடுமுறைகள், மத, பண்பாட்டு பண்டிகை, சமூகத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு தினங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளும் அடங்கும். விடுமுறை நாட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஜனவரி 1 - புத்தாண்டு
ஜனவரி 15 - பொங்கல்
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - உழவர் திருநாள்
ஜனவரி 26 - குடியரசு தினம்
பிப்ரவரி 1 - தைப்பூசம்
மார்ச் 19 - தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 21 - ரம்ஜான் ஈத்
மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 1 - ஆண்டு கணக்கு முடிப்பு நாள்
ஏப்ரல் 3 - குட் ஃபிரைடே
ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்
மே 1 - மே தினம்
மே 28 - பக்ரீத்
ஜூன் 26 - முஹர்ரம்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26 - மிலாத் உன் நபி
செப்டம்பர் 4 - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 14 - விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 19 - ஆயுத பூஜை
அக்டோபர் 20 - விஜயதசமி
நவம்பர் 8 - தீபாவளி
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்.
மேலே கொடுக்கப்பட்டவை அரசு அலுவலகங்களுக்கானதுதான். கல்வித் துறை விரைவில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும் என தெரிகிறது. பெரும்பாலான பண்டிகைகள் சனி, ஞாயிறு விடுமுறையில் வராதது அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications