ஊர்க்காவல் படைக்கு சங்கம்...தண்டனைக்குரியது...தமிழக அரசு வாதம்!!
சென்னை: ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை எதிர்த்து நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலர் சார்பாக சென்னை மாநகர துணை ஆணையர் பெரோஸ் கான் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஊர்க்காவல் படை என்பது சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத ஓர் தன்னார்வ அமைப்பு எனவும், தேவையை பொறுத்து அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவதாகவும், அவர்களுக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
காவல்துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதியில்லை என்கிற போது, காவல்துறை பணிகளை மேற்கொள்ளும் ஊர்க்காவல் படைக்கும் சங்கம் வைக்க அனுமதியில்லை எனவும், அரசின் அனுமதியின்றி சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications