"கிளம்பற நேரத்துல" இறையன்புவுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழக அரசு கலக்கல்.. மனம் குளிரும் வாகன ஓட்டிகள்
சென்னை: தலைமை செயலாளராக பதவி ஓய்வு பெறும்நிலையில், இறையன்பு வைத்த கடைசி கோரிக்கையும் தற்போது நிறைவேறி உள்ளது.. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.. துறை ரீதியான விஷயங்களில் தீவிர கவனத்தையும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், பசுமை மயானங்கள் விவகாரத்தையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

பசுமை மயானம்: அந்தவகையில் பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடந்த வாரம், இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல, தங்கும் டிரைவர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்தி, அதற்கான உத்தரவையும் சுற்றுலா துறைக்கு இறையன்பு அப்போது பிறப்பித்திருந்தார்.. இது தொடர்பாக, வீட்டு வசதித் துறை செயலர் அபூர்வாவுக்கு, தலைமை செயலர் இறையன்பு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்..
டிரைவர்கள்: அந்த கடிதத்தில், "சுற்றுலாவுக்காக வெளியூர் செல்வோர், ஹோட்டல் அல்லது விடுதியில் அறை எடுத்து தங்குகின்றனர். ஆனால், ஓட்டுனர்களோ ஹோட்டல், விடுதி வளாகம் அல்லது வாகனங்களில் தங்கும் நிலைமையே உள்ளது... இதனால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அதனால், அனைத்து ஹோட்டல் மற்றும் விடுதிகளிலும், டிரைவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். அவ்வாறு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சபாஷ்: விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கு கட்டாயம் ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். இதற்காக சாதாரணமான தொகையை வசூலிக்கலாம். வாகன நிறுத்த கட்டணத்தில் கூட அதை இணைத்து பெறலாம்... அதனால், பெருநகரங்கள், சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி கோரும்போது, ஓட்டுநர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு இதுபோல மனிதாபிமானத்துடன் உதவும்போது, விபத்துகளை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு, ஓட்டுநர்கள் நலனில் உங்களது இந்த நடவடிக்கை வரவேற்பை பெறும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டிருந்தார்.. டிரைவர்களின் உடல்நிலை குறித்து, மிக மிக நுட்பமாக யோசித்து, அவர்களின் மீதான நலனை வெளிப்படுத்தியிருந்தது, பலரது கவனத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
இப்போது விஷயம் என்னவென்றால், இறையன்பு விடுத்த கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொண்டு, சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க உத்தரவு அளித்துள்ளது...
சிறப்பு: வாகனங்களில் செல்வோர் தங்குமிடங்களில், ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்றும், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது... வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் தர இறையன்பு கடிதம் எழுதிய நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் இறையன்பு ஓய்வு பெறும்நிலையில், இந்த உத்தரவு வெளியாகி உள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications