ஆரம்பமே அசத்தல்.. ஸ்டாலினின் "மாஸ்டர் ஸ்ட்ரோக்".. பெண்களுக்கு அடுத்த குட் நியூஸ்.. தமிழக அரசு சபாஷ்
சென்னை: தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் முன்னெடுத்து வரும்நிலையில், இன்னொரு தித்திப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெண்கள் அனைத்து துறையிலுமே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.. சொந்தக்காலில் நின்று சுயசம்பாத்தியம் செய்யும் அளவுக்கு தங்களை வளர்த்தும் கொண்டும் வருகிறார்கள்.

இதனால், சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. எனினும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.. சுயமாக தொழில் தொடங்க ஆர்வமும் இருந்து, அதற்கு வழியில்லாத பெண்களுக்கு, தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது.
தமிழக அரசு அதிரடி: அந்தவகையில், பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது.. இந்த திட்டத்தின்படி, பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது.. அதுவும் மிக மிக குறைந்த வட்டியில்.
இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது... கிராமப்புற பிராந்திய வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிடமிருந்து பெண்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம்.. 25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.. ஆனால், அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
விதவைப்பெண்கள்: இதைத்தவிர, விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த வருமான வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. கேண்டீன், கேட்டரிங், பியூட்டி பார்லர் என கிட்டத்தட்ட 88 வகையான தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம்.. வட்டியே இல்லாமல் கூட இந்த திட்டத்தில் கடன் கிடைக்கும் வசதியும் உண்டு.. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசிடமிருந்து 30 சதவீத மானிய உதவியும் கிடைக்கிறது.
இப்படி பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் சமுதாய வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும்நிலையில், இன்னொரு சூப்பர் அதிரடியை தற்போது அறிவித்துள்ளது.
கடன் வசதி: அதன்படி, பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்காக, குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படுகிறது... மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த கடன் வழங்கப்பட உள்ளது. இந்த கடன் வசதியை பெற வேண்டுமானால், ஒரு குழுவில், 10 முதல், 20 பேர் வரை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.. ஒரு குழுவுக்கு அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பிரிவின் கீழ், 100 சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு, தமிழக அரசு அதிரடியாக தற்போது உத்தரவிட்டிருக்கிறது.. இது தவிர, முதல் தலைமுறையை சேர்ந்த, 100 தொழில் முனைவோருக்கு கடன் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு வங்கி: இந்த கடன் தொகை அளவானது, தொழில் முனைவோர் தரக்கூடிய திட்டத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏற்கனவே, கலைஞர் உரிமைத்தொகையை பெண்களுக்கு வழங்க உள்ள நிலையில், இன்னொரு சிறப்பு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது, மகளிரிடம் மிகுந்த மகிழ்ச்சியையும், தெம்பையும் தந்து கொண்டிருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications