சென்னைக்கு குட்நியூஸ்.. ஜிஎஸ்டி ரோடு டூ ஈசிஆர் வரை 32 கிமீ புதிய ரோடு.. டிராபிக்கிற்கு இனி குட்பை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை செல்லும்போதும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கிளம்பும்போதும் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க ஜிஎஸ்டி சாலையில் கருங்குழியில் இருந்து ஈசிஆர் வழியாக பூஞ்சேரிக்கு 32 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய பசுமை வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இனி ஜிஎஸ்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்படாது.

சென்னையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் சென்னையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. சென்னையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பலரும் பக்கத்து மாவட்டங்களில் வீடு எடுத்து தங்கி பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

chennai gst road traffic

அந்த வகையில் பார்த்தால் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் 40 லட்சம் பேர் வரை சென்னைக்கு சென்று திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து தென்மாநிலங்களுக்கு செல்லும் மக்களும், பண்டிகை, விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பும்போதும்

சென்னையில் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு டோல்கேட், ஜிஎஸ்டி சாலையில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி ஜிஎஸ்டி சாலையில் கருங்குழியில் இருந்து ஈசிஆரின் பூஞ்சேரிக்கு 32 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிதாக பசுமை வழிச்சாலை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான டெண்டர் என்பது கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முழுவிபரம் வருமாறு:

சென்னை ஜிஎஸ்டி சாலையில் மதுராந்தகம் முதல் தாம்பரம் வரை அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலின்போது வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆரின் பூஞ்சேரியை இணைக்கும் வகையில் 32 கிலோமீட்டருக்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது.

இந்த சாலை என்பது அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணியை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் (TNRDC or Tamil Nadu Road Development Company) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கூறுகையில், ‛‛ சென்னையில் இருந்து என்எச் 45 (ஜிஎஸ்டி சாலை) வழியாக திண்டிவனம் செல்லும் ரோடு மாநிலத்தில் அதிக வாகனங்கள் பயணிக்கும் சாலைகளில் ஒன்றாக உள்ளது. செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை தினமும் 65 ஆயிரம் கார்கள் பயணிக்கின்றன. தாம்பரம் முதல் திண்டிவனம் வரை தினமும் 10 லட்சம் வாகனங்கள் செல்கின்றன'' என்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டுக்கு முன்பு போக்குவரத்தை மாற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில் மதுராந்தகம், ஜிஎஸ்டி சாலையில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆரில் உள்ள பூஞ்சரேிக்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோடு அமைக்கப்படும் பட்சத்தில் சென்னையின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் செங்ல்பட்டு முதல் தாம்பரம் வரை பயணிக்க வேண்டிய சூழல் இருக்காது. இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

இப்போது கருங்குழியில் இருந்து மனமதி வரையிலான 31 கிலோமீட்டர் உள்ள வெளிவட்ட சாலை என்பது உள்ளது. இருப்பினும் பல இடங்களில் சாலை குறுகலாக உள்ளது. அதோடு சில இடங்களில் 15 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் சாலைகள் உள்ளன. இதனால் சில பாலங்கள் கட்டப்பட வேண்டி உள்ளது. பல இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த சாலையை விட புதிய சாலை அமைப்பது பயனளிக்கும். அதேபோல் இந்த ஜிஎஸ்டி ரோடு - ஈசிஆரை இணைக்கும் புதிய சாலை என்பது மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்வோருக்கும் பெரிய பலனளிக்கும்.

ஏற்கனவே சென்னையில் அக்கரை முதல் திருவான்மியூர் வரையிலான ஈசிஆர் ரோட்டை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி, ஈசிஆரின் டைடல் பார்க் சந்திப்பில் இருந்து உத்தண்டி வரையிலான எலிவேட்டட் ரோடு பணியையும் நெடுஞ்சாலை விரைவுப்படுத்தி உள்ள நிலையில் இந்த புதிய சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+