ரூ.1000 வருமா?.. பொங்கலுக்கு "சர்ப்ரைஸ்" தரப்போறாரா முதல்வர் ஸ்டாலின்.. வந்துவிழுந்த மகிழ்ச்சி தகவல்
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது ரொக்கம் மற்றும் பொருட்கள், அல்லது ரொக்கம் என தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு: கடந்த 2021-ல் அதிமுக ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் 2,500 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.. கொரோனா காலத்தில் பொது மக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களது வாழ்வாதாரம் கருதி இந்தத் தொகை வழங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு பிறகு திமுக அரியணை ஏறியது. அந்தவகையில், ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை... இந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கரும்பு மிஸ்ஸிங்: அதாவது, வழக்கமான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன், பொருட்களுக்குப் பதில் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வழங்கப்பட்டன. இதில் கரும்பு வழங்கப்படாதது உட்பட, இந்த பரிசு தொகுப்பு குறித்தும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, திமுக அமைச்சர் பெரிய கருப்பன், மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு துறை செயல்பாடு தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டுறவு வங்கிகள்: பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "கூட்டுறவு வங்கிகளில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.. இதனால் கந்து வட்டிக்காரர்களிடம், அதிக வட்டிக்கு கடன் வாங்குவது தடுக்கப்படுகிறது.
தேசிய தனியார் வங்கிகளில் வழங்கப்படும் அனைத்து நவீன வங்கி சேவைகளும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்க முயற்சி எடுக்கப்படும்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்... பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று பெரியகருப்பன் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பானது, தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
1000 ரூபாய்: காரணம், மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் ஏற்கனவே பல்வேறு அதிருப்தி நிலவி கொண்டிருக்கின்றன.. எதிர்க்கட்சிகள் இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை விஷயத்தை வைத்து, அரசியல் செய்தும் வருகின்றன.. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், இதையே மையமாக வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன..
எனவே, கார்டுதாரர்களுக்கு வரும் 1000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுக அமைச்சரும், பொங்கல் பரிசு தொகுப்பு தெரிவித்துள்ளது, இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications