பதிவுக்கட்டணம் உயர்ந்தது.. "இடி" போல வந்த கட்டண அறிவிப்பு.. அடுக்குமாடி குடியிருப்பு விலையும் உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக்கட்டணத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி, அப்பார்ட்மென்ட் ஓனர்களுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்கனவே கட்டணம் அமலில் உள்ளது.. அந்த பதிவு கட்டணத்துடன், புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு, அது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில், குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை இனி தனியாக பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல, கட்டுமான ஒப்பந்த கட்டணமாக தனியே 4 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கட்டண உயர்வு: இந்த புதிய கட்டண விகிதங்களை உடனடியாக அமல்படுத்தும் வகையில், அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு, பதிவுத்துறை ஐஜி-க்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், தொடர்ந்து நடந்து வரும் முறைகேடுகளை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவுக் கட்டணம் விதிக்கப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி விளக்கம் தந்துள்ளார்..
சார் பதிவாளர்கள்: இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது...
உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு, ஒரு அப்பார்ட்மென்ட் வாங்க வேண்டியிருந்தால், விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினாலே இதுவரை போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போதைய தனிப்பதிவு கட்டண உயர்வு காரணமாக, மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதிர்ச்சி: அதாவது ரூ.50லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் அளவுக்கு தனி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணம் இனி வசூலிக்கப்படுவதுடன், ஆங்காங்கே நடைபெறும் முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications