செக்! ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள்.. தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கும் வகையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு விடப்பட்ட டெண்டர்களில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சியாக இருந்த போதே திமுக குற்றஞ்சாட்டியது.

மேலும், தேர்தல் பிரசாரம் சமயத்திலும் இதை முன் வைத்து பிரசாரம் செய்தது. அதேபோல திமுக ஆட்சியைப் பிடித்த பின்னரும், முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்த விசாரணை ஆணையம் அடுத்த 3 மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
