ஆன்லைன் ரம்மி.. அநாதைகளாக நிற்கும் குழந்தைகள்.. தமிழக அரசு மாற்று வழிகளை ஆலோசிக்கனும்.. வேல்முருகன்!
ஆன்லைன் சூதாட்ட தடை செய்ய தமிழ்நாடு அரசு மாற்று வழிகளை ஆலோசிக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள், கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.
மாணவர்கள், இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

2 நாட்களில் இருவர் தற்கொலை
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் அநாதைகளாக நிற்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்திருப்பது சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்துகிறது.

ஆளுநருக்கு கண்டனம்
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி 6 மாதங்கள் ஆன நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது தமிழ்நாடு அரசையும், மக்களையும் இழிவுப்படுத்தும் செயல்.தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு, இன்றுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

ஒப்புதல் அளிக்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்டமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினையாக மாறியுள்ளது என்ற அடிப்படை புரிதலுமின்றி, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு பக்கபலமாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அனைத்து கட்சிக் கூட்டம்
இல்லாவிட்டால் ஆளுநருக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன். அதே நேரத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications