அடியோடு மாறுது அடையாறு.. இனி புத்தம் புதிய தோற்றத்தோடு இருக்கும்.. சென்னையே வியக்கும் திட்டம்
சென்னை: சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தற்போது முதல் கட்டமாக அடையாறு ஆறு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையில் இருக்கும் முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆறுகள் சுத்தம்: அதேபோல் கூவம் ஆற்றிலும் இதே மாற்றங்கள் செய்யப்படும். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கூவம், அடையாற்றை சுத்தம் செய்ய பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
ரூ. 320 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் செயல்படுத்தப்படும். எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அடையாறு ஆறு: சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் தற்போது முதல் கட்டமாக அடையாறு ஆறு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அடையாறு நீர்வழிப்பாதையின் விரிவான மறுசீரமைப்புக்காக ~4,779 கோடிகளை தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான காலம் 30 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் செயல்பாடு மற்றும் பராமரிப்பு 15 ஆண்டுகள் ஆகும். ஆற்றின் இருபுறமும் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கப்படும். இதன் மூலம் கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கப்படும்.
சமீபத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலின்படி, அடையாறு நதியை மீட்க சென்னை நதிகள் மாற்றும் நிறுவனம் (CRTC) என்ற புதிய நிறுவனத்தை அரசு உருவாக்கலாம். முன்மொழியப்பட்ட CRTC ஆனது, அடையாறு உட்பட நகரின் மூன்று முக்கிய நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2006 இல் உருவாக்கப்பட்ட சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) அறிவித்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதை ஏற்று இந்த நிறுவனம் தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. மாநில முனிசிபல் நிர்வாகத் துறை ஆற்றை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரித்து, இதை சரிசெய்ய ஜூலை மாதம் டெண்டர் விடப்பட்டது. மூன்று சர்வதேச நிறுவனங்கள் உட்பட 19 ஏலதாரர்கள் இதற்கு பங்கேற்றனர். சிஆர்டிசிக்கு அரசு ஒப்புதல் அளித்து, பணியாளர்களை நியமித்தவுடன் பணிகள் தொடங்கும்.
அரசு மூலம் உருவாக்கப்படும் இந்த புதிய நிறுவனம், ஆற்றங்கரை பராமரிப்பு, நடைபாதைகள் அமைத்தல், சைக்கிள் டிராக்குகள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும். 2018-ல் தொடங்கப்பட்ட அடையாறு நதி மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிற மாநில நிறுவனங்கள், 80%க்கும் அதிகமான பணிகளை முடித்துவிட்டதாக தீர்ப்பாயத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 522 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகள் ஆற்றங்கரைகளில் இருந்து அகற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை அழகுபடுத்தும் பணியும், கோட்டூர்புரம், மறைமலைநகர், ஜாபர்கான்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications