அடிதூள்.. "தோழி" திட்டத்தை களமிறக்கிய தமிழ்நாடு அரசு.. பெண்களுக்கான சிறப்பான திட்டம்.. என்ன இது?
சென்னை: தமிழ்நாடு முழுக்க வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளை தொடங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. தோழி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் என்ற பெயரில் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெண் விடுதலையை உறுதி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.

அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.
உரிமை தொகை: இது போக தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன.
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரமாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன.
அதேபோல் இதற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன. இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்கு என்று பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
விடுதிகள்: அதன்படி தமிழ்நாடு முழுக்க வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளை தொடங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. தோழி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் என்ற பெயரில் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி என்ற வரிகளுடன் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டு முதல் 4 இடங்களில் இது போன்ற விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. • • • 24*7 பாதுகாப்பு வசதி
• பார்க்கிங் வசதி
• பயோ-மெட்ரிக்
• இலவச WI-FI
• பொழுதுபோக்கு அம்சங்கள்
• அயனிங் வசதி
• கெய்சர் வசதி
* சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஆகியவற்றுடன் இந்த விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான மாவட்ட ரீதியான பட்டியலும் அரசு சார்பாக வெளியிடப்பட்டு உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications